'இதென்னடா மதுரைக்காரனுக்கு வந்த சோதனை'.. நடிகர் பவுன்ராஜ் திடீர் மரணம்.. ரசிகர்கள் உருக்கம்!
சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்த பவுன்ராஜின் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, சுந்தரப்பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பவுன்ராஜ்.
இயக்குநர் பொன்ராமிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றி வந்த பவுன்ராஜ், பொன்ராமின் பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநர் உருக்கம்
இந்நிலையில் மாரடைப்பால் பவுன்ராஜ் திடீரென மரணமடைந்துள்ளார். இதனை இயக்குநர் பொன்ராம் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வாழைப்பழ காமெடி
பவுன்ராஜின் நகைச்சுவை காட்சிகளை தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர். இயக்குநர் பொன்ராமின் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், ஷாக்கிங்.. அவருடைய வாழைப்பழ காமெடி நீண்ட நாள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மதுரைக்காரனுக்கு வந்த சோதனை
இதேபோல் மற்றொரு நெட்டிசனான இவர், இதென்னடா மதுரைக்காரனுக்கு வந்த சோதனை என கேட்டு ரெஸ்ட் இன் பீஸ் என பதிவிட்டுள்ளார்.

முறுக்கு சுட்டு விக்கிறான்
மற்றொரு ரசிகரான இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெற்ற ஜெர்மனியில்தான் தனது அக்கா மகன் முறுக்கு சுட்டு விற்பதகா கூறும் காமெடியை நினைவுகூர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

கிராமத்து ஸ்லாங்
மற்றொரு ரசிகரான இவர்.. ரொம்ப கஷ்டம்.. அவருடைய கிராமத்து ஸ்லாங் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் அவரை மிஸ் பண்ணுவோம் என்றும் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











