அனைவரும் சுவாசிக்க ஆக்சிஜன் வேண்டுமென அத்தனை மரங்கள் நட்டாயே.. விவேக் மரணம்.. கதறும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விவேக் மரண செய்தி பொய்யாக இருக்கக்கூடாதா என ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Recommended Video

நடிகர் Vivek -ற்கு நடந்தது என்ன? Actor VIVEK passed away | SIMS Hospital

59 வயதான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே சுயநினைவின்றி இருந்த நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோகிராம் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உயிர்பிரிந்தது..

உயிர்பிரிந்தது..

நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழுவினர், விவேக் இன்னும் ஆபத்தான கட்டத்தில்தான் உள்ளார். 24 மணி நேரத்திற்கு பிறகே சொல்ல முடியும் என்றும் கூறினர். ஆனால் 24 மணி நேரத்திற்குள்ளேயே விவேக்கின் உயிர் பிரிந்தது.

இறுதி அஞ்சலிக்காக..

இறுதி அஞ்சலிக்காக..

அவரது மறைவு ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறை பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் விவேக்கின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் அஞ்சலி

சமூக வலைதளங்களில் அஞ்சலி

அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

மிஸ் யூ சார்..

நடிகர் விவேக்கின் மரண செய்தியை அறிந்த இந்த ரசிகர் காலையிலே விழித்ததும் கண் கலங்க வைத்த ஒரு செய்தி.. மிஸ் யூ சார்.. எனக்கு இதுக்கு மேல ஏதும் சொல்ல வரல.. என்று பதிவிட்டுள்ளார்.

மரங்கள் பேர் சொல்லும்

மரங்கள் பேர் சொல்லும்

மற்றொரு ரசிகரான இவர், நடிகர் விவேக் இல்லையென்றாலும் அவர் நட்ட 5 மரமாவது அவர் பேர் சொல்லும்.. ஓய்வெடுங்கள் அய்யா.. என பதிவிட்டுள்ளார்.

தவிர்க்க முடியாத கலைஞர்

நடிகர் விவேக் மரண செய்தியை கேட்ட இந்த ரசிகர், பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.. தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத திரைக்கலைஞர்.. என பதிவிட்டுள்ளார்.

நீ சுவாசிக்க மறந்ததேனோ?

நடிகர் விவேக்கின் மரணம் குறித்த இந்த நெட்டிசன், அனைவரும் சுவாசிக்க ஆக்சிஜன் வேண்டுமென அத்தனை மரங்கள் நட்டாயே!! இன்று நீ சுவாசிக்க மறந்ததேனோ? என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நெஞ்கம் ஏற்க மறுக்கிறது

நடிகர் விவேக்கின் மரண செய்தியை அறிந்த இந்த ரசிகர், தன் நகைச்சுவை மூலம் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்த விவேக் சார் நம்முடன் இல்லை என்ற செய்தியை நெஞ்சம் ஏற்க மறுக்கிறது என பதிவிட்டு கலங்கியுள்ளார்.

பொய்யாக இருக்கக்கூடாதா?

நடிகர் விவேக் மரணமடைந்த செய்தியை கேட்ட இந்த ரசிகர் அவரது மரண செய்தி பொய்யாக இருக்கக்கூடாதா என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

எட்டாக்கனி..

குழி பறித்தவனுக்கு வலை விரித்தான் போலும் ஆண்டவன்.. மரங்கள் நட்டவனை மக்கள் மனங்களிலிருந்து பிடுங்குவதென்பது எட்டாக்கனி.. என நடிகர் விவேக்கின் மரணம் குறித்து பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஈடுசெய்ய முடியாத இழப்பு

மற்றொரு ரசிகரான இவர் சக மனிதர்களை மகிழ்விப்பது சாதாரண விஷயமில்லை. சமூக விழிப்புணர்வுடன் நகைச்சுவையையும் அள்ளித்தெளித்த சின்ன கலைவாணர் விவேக் இழப்பு ஈடு செய்ய முடியாதது என பதிவிட்டுள்ளார்.

விண்ணுலகம் காண சென்றாயோ

நம்ப முடியாத ஒன்று ஏற்க முடியாத மரணம்.. மாமனிதர் இன்று கலியுகத்தை விட்டு விண்ணுலகம் காண சென்றாயோ.. திரும்பி வா என நடிகர் விவேக்கின் மரணம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சிலையாய் நிற்க வைத்தாய்

சிலையாய் நிற்க வைத்தாய்

சிரிக்க வைத்தாய்.. சிந்திக்க வைத்தாய்.. இக்கணம் அனைவரையும்
சிலையாக நிற்க வைத்தாய்! என நடிகர் விவேக்கின் மரணம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.

நாயகனாக உயர்ந்தவர்

மற்றொரு ரசிகரான இவர், ஹீரோக்கள் ஜோக்கர்களாக அம்பலப்பட்டு நிற்கும் இந்த காலத்தில் சமூக அக்கறையோடு பணியாற்றி நமது நெஞ்சங்களில் 'நாயகனாக' உயர்ந்தவர் என பதிவிட்டுள்ளார்.

சிரிப்பை நிறுத்திய சின்ன கலைவாணர்

மற்றொரு ரசிகரான இவர், சிரிப்பை நிறுத்திய சின்ன கலைவாணர். இயக்குநர் சிகரம் பாலசந்தரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் விவேக். நகைச்சுவை மட்டுமின்றி சிந்தனையை தூண்டும் வகையிலும் நடித்து மக்களை கவந்தவர். 2009ம் ஆண்டு நடிகர் விவேக்கிற்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கியது மத்திய அரசு என பதிவிட்டுள்ளார்.

மரங்கள் நிற்கும் வரை

விவேக்கின் மரண செய்தியை கேட்ட இந்த ரசிகர், நீங்க உயிரோட தான் இருக்கீங்க விவேக் சார்.... நீங்க நட்ட மரங்கள் கம்பீரமாக நிற்கும் வரை.. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X