வாரிசு படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனா? ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் என்ன சொல்றாரு பாருங்க!
சென்னை: வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.
வாரிசு படத்தின் பிரத்யேக போஸ்டர்கள் வெளியான நிலையில், விஜய்யின் ஹேர்ஸ்டைல்களில் இரு வேறு வித்தியாசங்கள் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
ஏற்கனவே இந்த படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனிடம் அதுபற்றிய எழுப்பிய கேள்விக்கு அவர் கொடுத்த பதில் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

மிஸ்ஸான பீஸ்ட்
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் இந்த ஆண்டு சம்மருக்கு வெளியான பீஸ்ட் பெரிய சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரியப்பா கேஜிஎஃப் 2வுடன் போட்டிக்கு சென்று தனது வெற்றியை ரொம்பவே மிஸ் செய்து விட்டது. இந்நிலையில், விஜய்யின் அடுத்த படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களுக்கே நம்பிக்கையில்லை
ஆனால், வாரிசு படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி வரும் நிலையில், அந்த படத்தின் மீது விஜய் ரசிகர்களுக்கே பெரிய நம்பிக்கை இல்லை. எப்போ லோகேஷ் கனகராஜின் தளபதி 67 படத்தின் அப்டேட் வரும் என டிசம்பர் மாதத்துக்காக காத்திருக்கின்றனர். ஆனால், சத்தமில்லாமல் வம்சி பெரிய சம்பவம் செய்வார் என சில தீவிர ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.

வெறித்தனமான ஆக்ஷன் இருக்கு
வாரிசு படம் டைட்டிலை போன்றே குடும்ப பாங்கான படம் என்கிற டாக் தான் விஜய் ரசிகர்கள் மத்தியில் அந்த படத்துக்கு மிகப்பெரிய ஹைப் இல்லாமல் இருக்க காரணமே, ஆனால், சமீபத்தில் தனியார் யூடியூபுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் வம்சி இந்த படத்தின் கதை குடும்பத்தை மையமாக கொண்டிருந்தாலும், இது பக்கா தமிழ் படம் என்றும் விஜய் ஆக்ஷனில் மிரட்டி எடுத்துள்ளார் என்றும் கூறியிருந்தார்.

திலீப் சுப்பராயன் பேட்டி
இந்நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு தற்போது ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அளித்துள்ள் பேட்டியும் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதை விட படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. வாரிசு படத்தின் டீசர் மட்டும் வரட்டும் படம் வேறலெவலில் மிரட்டும் எனக் கூறியுள்ளார். வாரிசு படத்தின் பிரத்யேக ஸ்டில் தீபாவளியை முன்னிட்டு வெளியான நிலையிலேயே படத்தின் ஸ்டன்ட் காட்சிகள் தெறிக்கவிடும் என ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.

டபுள் ஆக்ஷனா
வாரிசு படத்தில் விஜய்க்கு வில்லன் யாருமில்லை அவரே தான் என ஏற்கனவே சில தகவவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனிடம் இந்த படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனா என்கிற கேள்வி எழுப்பட்ட நிலையில், சிரித்துவிட்டு அதை மறுக்காமல் படம் வரட்டும் பாருங்க, புடிக்கும் எனக் கூறியுள்ளார்.

கன்ஃபார்ம் பண்ண ரசிகர்கள்
அப்போ கண்டிப்பா விஜய் டபுள் ஆக்ஷன் தான் என்பதை ரசிகர்கள் கன்ஃபார்ம் செய்து வருகின்றனர். மேலும், வாரிசு படத்தின் கதை இதுதான் என்றும் துரத்தி விடப்படும் ஒரு பிள்ளையால் ஒட்டுமொத்த குடும்பத்துக்கே நேரும் பிரச்சனையை இன்னொரு மகன் எப்படி சரி செய்கிறான் என்பது தான் என்கின்றனர். எது உண்மை என்பது படம் வெளியானால் தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











