twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநர் இமயம் பாரதிராஜா பிறந்தநாள் எப்போது? ரசிகர்கள் குழப்பம்!

    |

    சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் பிறந்தநாள் என இரண்டு தேதிகள் குறிப்பிடப்படுவதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

    இயக்குநர் இமயம் பாரதிராஜா பதினாறு வயதினிலே படத்தின் மூலம் திரையில் இயக்குநராக அறிமுகமானார். கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை, காதல் ஓவியம், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

    மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உட்பட ஏராளமான விருதுகளை குவித்திருக்கிறார். கல்லுக்குள் ஈரம், பாண்டியநாடு உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் பாரதிராஜா.

    ரசிகர்கள் வாழ்த்து

    ரசிகர்கள் வாழ்த்து

    இந்நிலையில் நேற்று அவரது பிறந்த நாள் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதனை பார்த்த ரசிகர்கள் பாரதிராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.

    போட்டோ

    நடிகை ராதிகா சரத்குமாரும் பாரதிராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். இதுதொடர்பான போட்டோவையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

    ரசிகர்கள் குழப்பம்

    ரசிகர்கள் குழப்பம்

    ஆனால் சில ரசிகர்கள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தான் பாரதிராஜாவின் பிறந்த நாள் என்று தெரிவித்தனர். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

    உண்மையான பிறந்தநாள்

    உண்மையான பிறந்தநாள்

    இதுதொடர்பாக இயக்குநர் தரப்பில் விசாரித்தபோது, ஜூலை 17ஆம் தேதி, பதினாறு வயதினிலே படம் சென்சார் சான்றிதழ் வாங்கிய நாள். இதையே பிறந்தநாளாக பல ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் இயக்குனருக்கு ஆகஸ்டு 23 தான் பிறந்தநாள் என்று கூறினர்.

    English summary
    Fans confused about Director Bharathiraja birthday. Bharathiraja birthday is on Agust 23.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X