பிக்பாஸ் 5ல் முதல் ஆளாக ஆர்மி தொடங்கியது இவருக்குத்தான்!
சென்னை : தமிழில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் 5 தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது.
இதற்கு முந்தைய சீசன்களில் 16 போட்டியாளர்கள் மட்டுமே பங்கு பெற்ற நிலையில் இந்த முறை 18 போட்டியாளர்களை களமிறக்கியது பிக்பாஸ் குழு.
சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் பிரபலமான பிரபலங்கள் இந்த சீசனிலும் இறங்கி இருக்க முதல் ஆளாக ரசிகர்கள் பிரபல நடிகைக்கு ஆர்மியை தொடங்கியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5
போட்டியாளர்கள் எந்தவித வெளி தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் தனியே வீட்டில் இருக்க வேண்டும் என்ற கட்டளையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு சீசன்களாக தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது குறிப்பாக நான்காவது சீசன் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்ட வெற்றியை பெற்றது பிக்பாஸ் 4 வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 புத்தம்புதிய பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ளது இதில் எதிர்பார்க்காத பலர் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். இருப்பினும் எதிர்பார்த்த சிலர் இதில் இல்லாதது ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

18 போட்டியாளர்கள்
இதுவரை ஒளிபரப்பான நான்கு சீர்களிலும் 16 போட்டியாளர்கள் மட்டுமே ஆரம்பத்தில் என்ட்ரி கொடுத்தனர் ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக மொத்தம் 18 போட்டியாளர்களை பிக்பாஸ் களம் இறக்கி உள்ளது . அந்த வகையில் முதல் ஆளாக கானா பாடகி இசைவாணி என்ட்ரி கொடுத்தார் அவரை தொடர்ந்து சீரியல் ராஜூ ஜெயமோகன், மதுமிதா,அபிஷேக் ராஜ், நமிதா மாரிமுத்து, விஜே பிரியங்கா, அபினை வட்டி,சின்னபொண்ணு,பாவனிரெட்டி,நடியா சங், வருண்,இமான் அண்ணாச்சி, இயக்கி பெர்ரி, ஸ்ருதி ஜெயதேவன், அக்ஷரா ரெட்டி,தாமரைச்செல்வி,சிபி சந்திரன் என மொத்தம் 18 போட்டியாளர்கள் அடுத்தடுத்த என்ட்ரி கொடுத்தனர்.

ஆர்மி தொடங்கிவிட்டார்கள்
ஆரம்பத்திலேயே அபிஷேக் பிரியங்காவிடம் சாப்பாட்டு விஷயத்தில் மல்லுக்கட்ட ஆஹா ஆரம்பித்து விட்டதே என பிக்பாஸ் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்க இனிவரும் காலங்களில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஆர்மி தொடங்கப்படும். ஆனால் ஆரம்பத்திலேயே பிரபல நடிகை ஒருவருக்கு ஆர்மி தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள்.

பாவனி ரெட்டி ஆர்மி
அது வேறு யாருமில்லை நடிகை பாவனிக்கு தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகப்பிரபலமான சீரியல்களில் கதாநாயகியாக நடித்த பாவனி ரெட்டி ரெட்டைவால் குருவி ,
பாசமலர், சின்னத்தம்பி, ராசாத்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் . தெலுங்கிலும் படங்களில் தொலைக்காட்சி சீரியல்கள் என பிஸியாக நடித்து வந்த பாவனி ரெட்டி இப்பொழுது பிக்பாஸில் போட்டியாளராக களம் இறங்கி இருக்க இளைஞர்களின் மொத்த கண்ணும் இப்பொழுது இவர் மேல் தான். முதல் ஆளாக ரசிகர்கள் பாவனி ரெட்டிக்கு தான் ஆர்மி தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











