கலாநிதி மாறன் மீம்ஸ் ஒரு பக்கம் இருக்கட்டும்.. அல்லு அர்ஜுன் மீம்ஸைப் பாருங்க.. சிரிப்பை அடக்க முடியல
சென்னை: நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளதால், அது குறித்த தகவல்கள், எதிர்பார்ப்பு, வீடியோக்கள், மீம்ஸ்கள் என பலவும் இணையத்தை கலக்கி வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரசிகர்கள் உருவாக்கி உள்ள போஸ்டர்கள் படக்குழுவின் அதிகாரப்பூர்வமான போஸ்டர்களை காட்டிலும் சிறப்பாக இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் இசை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ள நிலையில், படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்த இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் மற்றும் அட்லீ உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மூன்று இயக்குநர்களுமே விஜயை இயக்கி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளனர். இப்படி இருக்கும்போது இதில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் அட்லீ ஆகியோர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும், படங்களை இயக்கி வருகிறார்கள்.

இதனால் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவுக்குச் செல்ல அவர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பொய் சொல்லி அனுமதி வாங்கினால் எப்படி எல்லாம் பொய் சொல்லி இருப்பார்கள் என்ற மீம்கள் நேற்று முதலே இணையத்தில் வலம் வந்து கொண்டு இருந்தது. இதனை பலரும் கலாநிதி மாறன் மீம்கள் என்று இணையத்தில் வேகமாக பகிர்ந்து வந்தார்கள்.
அட்லீ: இப்படி இருக்கும்போது, தற்போது அல்லு அர்ஜுன் மீம் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது, கோவை பிரதர்ஸ் படத்தில் நடிகர்கள் சத்யராஜ் மற்றும் வடிவேலு இணைந்து கிரிக்கெட் விளையாட செல்வார்கள். அது காமெடி காட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும். இந்த காமெடி காட்சியை மையமாக கொண்டு அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ இடையில் எப்படி உரையாடல் நடந்திருக்கும், அதுவும் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குச் செல்ல அட்லீ எப்படி பேசி இருப்பார் என இணையவாசிகள் உருவாக்கி உள்ள மீம்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
வீடியோ மீம்: அதாவது, " விஜய் அட்லீக்கு போன் செய்து, அண்ணன் மலேசியாவுல ஆடியோ லான்ச் வைத்திருக்கிறேன். தம்பி வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் என்று கூறுவது போலவும், அதைக்கேட்டு அட்லீ உடனே நான் வருகிறேன் என்று புறப்படுகிறார். அவரைத் தடுக்கும் அல்லு அர்ஜுன் எங்கே போகிறாய் என்று கேட்க, விஜய் குறித்து அட்லீ பேசி டிரெண்டான, ' என் அண்ணனுக்கு நான் தான் செய்வேன், அப்படி தான் செய்வேன்' என்ற வீடியோவைப் போட்டுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது இந்த மீம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.



Click it and Unblock the Notifications











