Vijay: தளபதி சொன்ன குட்டிக் கதையின் AI வெர்ஷன் வீடியோ.. எல்லாம் டெக்னாலஜி.. பசங்க பின்னுறாங்களே!
சென்னை: நேற்று அதாவது டிசம்பர் 27 ஆம் தேதி தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ள படமான ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பொதுவாக இசை வெளியீட்டு விழா என்றால், தளபதியின் குட்டிக் கதைக்கு தனி வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் உள்ளது. இப்படி இருக்கையில் நடிகர் விஜய் நேற்று சொன்ன குட்டிக் கதையின் AI வெர்ஷனை ரசிகர்கள் உருவாக்கி இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். அது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
ஒரு ஆட்டோக்காரர், ஒரு கர்ப்பிணி பெண்ணை மழையில் அழைத்துக் கொண்டு போகிறார். அந்த பெண்ணிடம் குடை இல்லாததால் தன்னிடம் இருக்கும் குடையை கொடுக்கிறார். அதற்கு அந்த பெண், இதை உங்களுக்கு எப்படி திருப்பிக் கொடுப்பது என்று கேட்டார். அதற்கு உடனே தேவைப்படும் யாருக்காவது கொடுத்து விடுங்கள் என்று கூறினார்.

அதேபோல் மருத்துவமனைக்குச் சென்ற கர்ப்பிணி, அங்கு முதியவர் ஒருவர் குடை இல்லாமல் இருந்ததைப் பார்த்து அவருக்கு அந்த குடையைக் கொடுக்கிறார். அந்த முதியவர் குடையை ஒரு பூக்கார அம்மாவிடம் கொடுகிறார். அந்த பூக்கார அம்மா ஒரு பள்ளிச் சிறுமியிடம் கொடுக்கிறார். அந்த சிறுமியின் அப்பா, அந்த ஆட்டோகாரர்.
உதவி: இந்த கதையில் இருந்து புரிந்து கொள்ள வேண்டியது, நாம் மற்றவர்களுக்கு எப்போதும் ஏதாவது ஒரு உதவியைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். ஒரு பழமொழி ஒன்று உள்ளது வெள்ளத்தில் சிரமப்படுவோருக்கு படகு கொடுத்து உதவினால், அது நாளை பாலைவனத்தில் நீங்கள் சிரமப்படும் போது, ஒட்டகமாக வந்து நிற்கும் என்பது தான் அது" என்று தெரிவித்தார்.

AI வீடியோ: மேலும் ஒருவர் நமக்கு கெடுதல் செய்து விட்டார் என்றால், அவருக்கு நாம் திருப்பி பழி வாங்கிவிட்டோம் என்றால் அந்த ஒரு நாள் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம். அதுவே, நாம் அந்த நபரை மன்னித்து விட்டு விட்டால், வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார். இப்படி இருக்கும்போது தளபதி சொன்ன குட்டிக் கதையை ரசிகர்கள் AI வெர்ஷனில் உருவாக்கிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வேகமாக பகிர்ந்தும் வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











