“காசுக்கா பஞ்சம்... ஒழுங்காதான் டிரஸ் போடேம்மா”... பிரபல நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்!

ராய் லட்சுமி வெளியிட்டுள்ள கவர்ச்சிப் புகைப்படத்தைப் பார்த்து நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

சென்னை: பிகினி புகைப்படம் வெளியிட்ட நடிகை ராய் லட்சுமியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

விக்ராந்தின் கற்க கசடற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. முதலில் ஹீரோயினாக மட்டுமே நடித்தவர் பிறகு துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் ராய் லட்சுமி கைவசம் சிண்ட்ரெல்லா படம் மட்டுமே உள்ளது. தற்போதைய டிரெண்ட் படி பட வாய்ப்புகளை பெற நடிகைகள் பலரும் தங்களுடைய கவர்ச்சிப் போட்டோக்களை டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

பிகினி புகைப்படங்கள்:

பிகினி புகைப்படங்கள்:

அதுபோல் நடிகை ராய் லட்சுமியும் தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ஊதா கலர் பிகினியில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலானது. பிகினி உடை அணிந்து போஸ் கொடுக்க, தனது உடம்பை அதற்கு ஏற்ப பிட்டாக்குவதற்கு கடுமையாக உழைத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

சூப்பர் போட்டோ:

இந்நிலையில் மீண்டும் ஒரு பிகினி புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இம்முறை கருப்பு நிற பிகினியில் அவர் தோன்றியுள்ளார். அந்த புகைப்படம் அரைவெளிச்சத்தில் (சில்ஹவுட்) உள்ளது. ராய் லட்சுமியின் இந்த புகைப்படத்தை பார்த்து ஜொல்லர்கள் பலர், வாவ், சூப்பர், செக்ஸி என கமெண்ட் செய்துள்ளனர். ராய் லட்சுமி நீங்க செம ஹாட் என பலர் பதிவிட்டுள்ளனர். மேலும் பலர் எமோட்டிகான்களை பதிவிட்டு ரசித்துள்ளனர்.

திட்டும் ரசிகர்கள்:

திட்டும் ரசிகர்கள்:

ஆனால் ஒரு சிலர் ராய் லட்சுமியை கடுமையாக விமர்சித்துள்ளனர். "ஏழைகளுக்கு தான் காசில்லை. அதனால சரியான உடையணிய முடியல. உங்களுக்கு என்ன காசுக்கா பஞ்சம். ஒழுங்கா டிரஸ்க்கூட போடத் தெரியாதா", என கேட்டுள்ளார் ஒருவர்.

நல்ல வைப்ரேஷனா?

நல்ல வைப்ரேஷனா?

'தயவு செய்து இதுமாதிரியான கருமத்தை எல்லாம் நிறுத்துறீங்களா' என ஒருவர் காட்டமாக கூறியுள்ளார். 'டிரஸ் இல்லாம இருந்தா நல்ல வைப்ரேஷனா' என மற்றொருவர் கிண்டல் அடித்துள்ளார்.

விமர்சனம்:

விமர்சனம்:

14 வருடங்களாக முயற்சித்தும் ராய் லட்சுமியால் முன்னணி நடிகையாக முடியவில்லை. பாவம் இந்த பிகினி போட்டோக்களை தற்போது நம்பியிருக்கிறார். அதையும் ரசிகர்கள் இப்படி விமர்சிப்பார்கள் என நினைத்திருக்க மாட்டார் ராய் லட்சுமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X