இந்த டயலாக் சமந்தாவிற்கு தானா...திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
சென்னை : காதல் திருமணம் செய்து கொண்ட சமந்தா - நாக சைதன்யா இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்களின் நான்கு ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சோஷியல் மீடியாவில் பிரிவை இருவரும் அறிவித்தனர்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இருவரும் தங்களின் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். ஆனாலும் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்ததுடன், தங்களின் படங்களில் பிஸியாக நடிக்க துவங்கி விட்டனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நாக சைதன்யா மற்றொரு நடிகையுடன் காதலில் விழுந்ததாகவும், டேட்டிங் சென்று வருவதாகவும் தகவல்கள் பரவின. இதனால் கடுப்பாகி சமந்தா சோஷியல் மீடியாவில் கமெண்ட் செய்து, தனது எதிர்ப்பை வெளிப்படுத்தனார்.

நாய்க்கு நன்றி சொன்ன சைதன்யா
நாகசைதன்யா தற்போது தேங்க் யு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் தனது அம்மாவுடன் குழந்தையாக இருக்கும் போது எடுத்த போட்டோ, அப்பாவுடன் எடுத்த போட்டோ, நாய்க்குட்டியுடன் எடுத்த போட்டோ ஆகியவற்றை பகிர்ந்து, நன்றி சொல்லி இருந்தார். தனது வாழ்க்கையில் அன்பை உணர வைத்து, உயிர்ப்புடன் வைத்திருந்தது நீ தான் என நாய்க்குட்டிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

சமந்தாவை மிஸ் பண்றாரா
சமந்தாவின் செல்ல நாய்க்குட்டி ஹாஷ். நாக சைதன்யாவும், சமந்தாவும் ஹாஷ்க்கு பெற்றோர்களாக இருந்தார்கள். இவர்களின் பிரிவிற்கு பிறகு இப்போது ஹாஷ் சமந்தாவுடன் வசித்து வருகிறது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ஒரு நாய் குட்டியை சைதன்யா இவ்வளவு மிஸ் பண்ணும் போது நிச்சயமாக சமந்தாவை மிஸ் செய்வார் என்று கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர்.சமந்தாவை மறக்க முடியாமல் தான், அவரை மிஸ் செய்வதை தான் நாக சைதன்யா மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்றும் சிலர் கமெண்ட் செய்தனர்.

தேங்க் யு டிரைலர்
இந்த சமயத்தில் சமந்தாவை குறிப்பிடும் வகையில் நாக சைதன்யாவின் 'தேங்க் யூ' பட ட்ரைலரில் வசனம் ஒன்று இடம்பெற்று இருப்பதாக ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.தமிழில் சூர்யா நடித்த '24' படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில், நாக சைதன்யா, ராஷி கண்ணா, 'குக்கூ' படக் கதாநாயகி மாளவிகா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சர்ச்சையான அந்த டயலாக்
இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அந்த டிரைலரில் உள்ள ஒரு வசனத்தில், "உறவில் இருக்கும் ஒருவரைக் கட்டுப்படுத்தும் காதலை விட, விட்டுக் கொடுக்கும் காதல் சிறந்தது" என இருக்கிறது.காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரில் உள்ள இந்த வசனம் தான் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தாவிற்கு தான் இந்த டயலாக்கா
இது சமந்தா உடனான, நாக சைதன்யாவின் முறிந்து போன காதல் திருமண வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுவதாக உள்ளது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல இப்படி ஒரு நபரை பிரிய சமந்தாவிற்கு எப்படி மனம் வந்தது என்று சமந்தாவை பல ரசிகர்கள் அந்த ட்ரைலருக்கு கீழ் திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











