Nayanthara - நயன்தாரா ஒரு எட்டு கேப்டன் நினைவிடத்திற்கும் சென்று பார்த்திருக்கலாமே.. விளாசும் நெட்டிசன்கள்

சென்னை: நயன்தாரா தமிழின் டாப் நடிகைகளில் ஒருவர். கடைசியாக அவரது நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியானது. தற்போது மண்ணாங்கட்டி படத்தில் நடித்துவருகிறார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐசி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துவருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் விஜயகாந்த் நினைவிடத்துக்கு அவர் செல்லாததால் அவர் மீது ரசிகர்கள் விமர்சனத்தை வைத்திருக்கின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. பல போராட்டங்கள், தனிமனித தாக்குதல்களை சந்தித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரை கிளாமருக்காக மட்டுமே திரையுலகம் பயன்படுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும் முட்டி மோதி தன்னுடைய திறமையை காண்பிக்கும் படங்களில் நடிக்க முயன்றுகொண்டே இருந்தார்.

Fans criticize Nayanthara for not going to Vijayakanths memorial

நானும் ரௌடிதான்: அந்தவகையில் அவருக்கு கிடைத்த படம்தான் நானும் ரௌடிதான் மற்றும் அறம். இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. குறிப்பாக நயனின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அறம் படம் வெளியானதிலிருந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழிக்கு சொந்தமானார் நயன். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

குடும்ப வாழ்க்கை, நடிப்பு: திருமணம் செய்துகொண்ட நயன் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டார். உயிர், உலக் என அவர்களுக்கு பெயர் வைத்திருக்கிறார். திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்டாலே நடிப்புக்கு மூட்டை கட்டும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில் நயன்தாரா தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார் அவர்.

தமிழில்: ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் தீவிர கவனம் செலுத்திவரும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அது அவருக்கு 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அதனால் நயன் கொஞ்சம் அப்செட்தான். ஏனெனில் எந்தப் படத்துக்கும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபடாத நயன் இந்தப் படத்துக்கு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டார். இருந்தாலும் படம் சுத்தமாக எடுபடவில்லை. தியேட்டர் மட்டுமின்றி ஓடிடி ரிலீஸிலும் படம் டல்லடித்துவிட்டது. அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடித்துவருகிறார்.

விமர்சனம்: இந்த சூழலில் நயன்தாரா மீது ரசிகர்களில் ஒருதரப்பினர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துவருகிறார்கள். அதாவது கலைஞர் 100 விழா தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு சினிமாவில் கருணாநிதி ஏற்படுத்திய தாக்கம், அவர் எழுத்து உள்ளிட்டவைகள் குறித்து சிலாகித்து பேசினார்.

நேற்று நடைபெற்ற இவ்விழாவில் நயன் தாராவும் கலந்துகொண்டார். இதை கவனித்த நெட்டிசன்கள் கலைஞர் 100 விழாவுக்கு நயன் சென்றதில் எந்த விமர்சனமும் இல்லை. ஏனெனில் கலைஞர் கருணாநிதி சினிமாவுக்கு ஏகப்பட்ட விஷயங்களை செய்திருக்கிறார். அதேசமயம் விஜயகாந்த்தும் சளைத்தவர் இல்லை. அவரும் நடிகர் சங்க தலைவராக இருந்து பல உதவிகளை செய்திருக்கிறார். பல பங்களிப்புகளை கொடுத்திருக்கிறார்.

ஆனால் நயன்தாராவோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. அதேசமயம் நினைவிடத்துக்காவது சென்றிருக்கலாமே. கலைஞர் 100 விழாவுக்கு மட்டும் சென்றதற்கு ஏதேனும் கண்டிப்பாக உள்குத்து இருக்கும். இப்போதும் ஒன்றும் மோசமில்லை விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வரலாமே என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X