ஆறு மாத குழந்தையை வைத்து சம்பாதிக்கிறாரா ரோபோ சங்கர் மகள்?.. ரசிகர்கள் கேள்வி.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்

சென்னை: ரோபோ சங்கரின் மகளும் நடிகையுமான இந்திரஜா கடந்த வருடம் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.அவர்களுக்கு ஒரு மகள் சமீபத்தில்தான் பிறந்தான். மகன் பிறந்ததிலிருந்து தொடர்ந்து வீடியோக்களாக போட்டுத்தள்ளும் இந்திரஜா அண்மையில் போட்ட வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் இந்திரஜாவுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.

சின்னத்திரையில் ஃபேமஸாக வலம் வந்துகொண்டிருந்த ரோபோ சங்கர் தனுஷின் மாரி படத்தில் நடித்து திரைத்துறைக்கு வந்தார். அந்தப் படத்துக்கு பிறகு வரிசையாக படங்கள் நடிக்க ஆரம்பித்த அவர்; திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனார். அதற்கு முழு காரணமும் குடி பழக்கம்தான். பிறகு ஒருவழியாக சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய அவர்; இப்போது ஆரோக்கியத்தோடு இருந்துவருகிறார்.

இந்திரஜா சங்கர்: இதற்கிடையே ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா பீஸ்ட் படத்தில் முக்கியமான் ரோலினை ஏற்று நடிகையாக அறிமுகமானார். அந்த ரோலை மிக சிறப்பாக செய்து முதல் படத்திலேயே பெயரையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து கார்த்தி நடித்த விருமன் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். தொடர் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த சூழலில் அவருக்கு வாய்ப்பு குறைந்தது.

Fans criticize Robo Shankar s daughter Indraja for posting a video with her baby
Photo Credit:

திருமணம் செய்துகொண்ட மகள்: சூழல் இப்படி இருக்க அவர் கார்த்திக் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் பிரமாண்டமாக மதுரையில் நடந்தது. பிறகு ரிசப்ஷன் சென்னையில் நடந்தது. அவர்களது திருமண நிகழ்வுகள் அனைத்துமே தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. அளவுக்கதிகமாக அந்த ஒளிபரப்பு சென்றதன் காரணமாக நெட்டிசன்ஸ் அதனை கடுமையாக ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தார்கள்.

தொடர் வீடியோக்கள்: அந்த வீடியோ சமாசாரம் கொஞ்சம் ஓய்ந்த நிலையில்; சமீபத்தில் இந்திரஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போதிருந்து இந்திரஜா தொடர்ந்து வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுக்கொண்டே இருக்கிறார். அவற்றில் பல வீடியோக்கள் ஏதோ ஒரு தயாரிப்புக்கோ அல்லது நிறுவனத்துக்கோ ப்ரோமோஷன் செய்வதுபோன்றே உள்ளதே என்று பேச்சுக்கள் எழுந்தன.

உருவான பிரச்னை: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவர் தனது ஆறு மாத குழந்தையை He Guru என்ற நிறுவனத்துக்கு தூக்கி சென்றிருக்கிறார். அந்த நிறுவனமானது குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சியை தூண்டும் பயிற்சியை கொடுக்கும் கம்பெனி என்று சொல்லப்படுகிறது. அந்த நிறுவனத்துக்குத்தான் தனது குழந்தையை தூக்கி சென்று சில பயிற்சிகள் கொடுக்கப்படும் வீடீயோவை ஷேர் செய்திருக்கிறார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஆறு மாத குழந்தைக்கு இப்போதே இந்த பயிற்சியா இதெல்லாம் ஓவர்; உண்மையில் தனது குழந்தைக்காக சென்றாரா இல்லை அந்த நிறுவனத்தை ப்ரோமோட் செய்து வீடியோ போட சென்றாரா?.. தனது குழந்தையை வைத்தே ப்ரோமோஷன் வீடியோவை இந்திரஜா போட ஆரம்பித்துவிட்டார்; இதேபோன்று இன்னும் சில ப்ரோமோஷன் வீடியோக்களை போட்டிருக்கிறார். எதற்காக தனது குழந்தையை வைத்து சம்பாதிக்க வேண்டும் என்று விமர்சிக்க தொடங்கியிருக்கிறார்கள் ரசிகர்கள். மேலும் இதுதொடர்பான ஒரு செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ரோபோ சங்கரின் ஆறுமாத பேரனின் மூளையை டெவலப் செய்ய சிறப்பு பயிற்சி என ப்ளூ சட்டை மாறனும் குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X