மாமியாருக்கு யாராவது லிப் கிஸ் தருவாங்களா?.. ரோபோ சங்கர் மருமகனை கிழிக்கும் ரசிகர்கள்
சென்னை: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் கடந்த மாதம் 24ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இதில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்திரஜா தனது உறவினரான கார்த்திக் என்பவரையே திருமணம் செய்திருக்கிறார். இந்தச் சூழலில் திருமண வரவேற்பின்போது ரோபோ சங்கரின் மனைவியிடம் கார்த்திக் நடந்துகொண்டது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சின்னத்திரையில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமடைந்தவர் ரோபோ சங்கர். தனது திறமையால் படிப்படியாக வளர்ந்த அவர் டிவியில் இருக்கும்போதே தமிழ்நாடு முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார். அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் செய்த காமெடிகள் அப்போது வெகு பிரபலம். அதனையடுத்து சினிமாவுக்குள் நுழைந்த அவர் பெரிய திரையிலும் தனது திறமையை நிரூபித்தார். மாரி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு அட்டகாசமாக இருந்தன.

வரிசையாக வாய்ப்புகள்: இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வரிசையாக கிடைத்தன. அதன்படி விஸ்வாசம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என தொடர்ந்து நடித்த அவர் புகழின் உச்சிக்கு சென்றார். முக்கியமாக காமெடி ஆக்டருக்கான இடம் வெற்றிடமாக இருக்கிறது என்று ஒரு பேச்சு எழுந்த சூழலில் அதனை ரோபோ சங்கர் நிரப்பிவிடுவார் என்று ரசிகர்களால் ஆரூடம் கூறப்பட்டது. அதனை நோக்கித்தான் அவரது வளர்ச்சியும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக்குறைவு: நிலைமை இப்படி இருக்க அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அளவுக்கதிகமான மதுப்பழக்கம்தான் அதற்கு காரணம். அதனை ரோபோவும் பல பேட்டிகளில் ஒத்துக்கொண்டார். குறிப்பாக சாவை தொட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். அவருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். அவரும் பிகில் படத்தின் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அதில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல்களை பெற்றார்.
திருமணம்: தொடர்ந்து விருமன் படத்தில் நடித்த அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தார் முடிவு செய்தனர். அதன்படி ரோபோ சங்கர் மனைவியின் தம்பியான (உறவு முறையில் தம்பி இல்லை என்றும் ஒரு பேச்சு உண்டு) கார்த்திக் என்பவரை மாப்பிள்ளையாக உறுதி செய்தனர். அதனையடுத்து இரண்டு பேரின் திருமணம் மதுரையில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது. அதில் சூரி, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிறகு திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.
சர்ச்சையை ஏற்படுத்திய செயல்: அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். கமல் ஹாசன் , சிவகார்த்திகேயன் என நட்சத்திரங்கள் கூடியதால் இந்திரஜாவின் ரிசப்ஷன் ஜொலித்தது. கமல் ஹாசனை காலில் விழுந்தெல்லாம் வரவேற்றார் ரோபோ சங்கர். இந்தச் சூழலில் திருமண வரவேற்பில் ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் செய்த செயல் ஒன்று ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது மேடையில் ரோபோ சங்கரின் மனைவியும், கார்த்திக்கும் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது ரோபோவின் மனைவி உதட்டில் கார்த்திக் தனது உதட்டை வைத்துவிட்டார். அதனைப் பார்த்த ரசிகர்கள் யாராவது மாமியாருக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பார்களா?.. இதெல்லாம் என்ன மாதிரியான பழக்கம் என்று கடுமையான விமர்சனத்தை சமூக வலைதளங்களில் வைத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











