Rashmika Mandanna - என்ன காசுக்காக இப்படி இறங்கிட்டாங்க?.. நம்ம ராஷ்மிகாவா இது - ரசிகர்கள் கொந்தளிப்பு

சென்னை: Rashmika Mandanna (ராஷ்மிகா மந்தனா) ராஷ்மிகா மந்தனாவின் ஒரு செயலை பார்த்து ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் அறிமுகமான அவரை தெலுங்கு திரையுலகம் கெட்டியாக பிடித்துக்கொண்டது. அங்கு அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடிக்க அவரது கிராஃப் சரசரவென உயர்ந்தது. அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமடைந்தார்.

Fans Criticized Actress Rashmika Mandanna for McDonalds Advertisement

பான் இந்தியா ஹீரோயின்: ராஷ்மிகா மந்தனாவுக்கான கிரேஸ் கீதா கோவிந்தம் படத்திலிருந்தே ஆரம்பித்துவிட்டது என்றாலும் அவரை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்த்தது புஷ்பா திரைப்படம். பான் இந்தியா அளவில் வெளியாகி படமும் ஹிட்டானது. அதிலும் படத்தின் பாடல்களில் ராஷ்மிகாவின் நடனம் பெரும் ட்ரெண்டானதால் ராஷ்மிகாவும் இந்திய அளவில் கவனிக்கப்படும் ஹீரோயினாக மாறினார். இதன் காரணமாக ஹிந்தியிலும் கமிட்டாகியிருக்கிறார் அவர்.

ஹிந்தியில் ராஷ்மிகா மந்தனா: அந்தவகையில் அவர் ஹிந்தியில் ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் நடித்துவருகிறார். இதற்கு முன்னதாக அவர் மிஷன்மஜ்னு என்ற ஹிந்தி படத்திலும் நடித்திருந்தார். அந்தப் படம் டீசண்ட்டான வரவேற்பை பெற்றது. அதேபோல் அனிமல் படமும் ஹிட்டாகி ஹிந்தியில் தனக்கு ஒரு நிலையான இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ராஷ்மிகா இருக்கிறார்.

பிற படங்கள்: இதற்கிடையே தெலுங்கில் அவர் புஷ்பா 2 படத்தில் நடித்துவருகிறார். அதேபோல் தமிழில் அவர் கார்த்தியுடன் நடித்த சுல்தான், விஜய்யுடன் நடித்த வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்திருப்பதால், தமிழில் நிலையான இடத்தை பிடிக்கும் திட்டத்தோடு ரெயின்போ படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்.

Fans Criticized Actress Rashmika Mandanna for McDonalds Advertisement

விளம்பரம்: படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடிக்கிறார் ராஷ்மிகா. அந்தவகையில் அவர் சமீபத்தில் நடித்த மெக் டொனால்ட்ஸ் விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஃப்ரைடு சிக்கன் பர்கரை அறிமுகப்படுத்தியது. அந்த விளம்பரத்தில் ராஷ்மிகா நடித்தார். அதற்காக பெரும் தொகையை அவர் சம்பளமாக பெற்றார் என பேச்சு எழுந்தது.

Fans Criticized Actress Rashmika Mandanna for McDonalds Advertisement

காசுக்காகவா இப்படி: அந்த விளம்பரத்தில் சிக்கனை அவர் சாப்பிடும்படி காட்சி இருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள், எப்போதும் சைவ உணவுதான் சாப்பிடுவேன் என பல பேட்டிகளில் சொன்ன ராஷ்மிகா மந்தனா, பணத்துக்காக தற்போது அசைவ உணவை சாப்பிடும்படி நடித்திருக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம் என கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.

காதலில் ராஷ்மிகா: முன்னதாக, ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்துவந்தனர். அவர்கள் இரண்டு பேரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். விஜய் தேவரகொண்டாவுக்கு பிடித்த மோதிரத்தைத்தான் ராஷ்மிகா மந்தனா கையில் அணிந்திருக்கிறார் எனவும் பேசப்பட்டது. அதுகுறித்து ராஷ்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில், "அய்யோ ரொம்ப யோசிக்காதீங்க" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X