பொன்னி நதியாக மாறிய நீச்சல் குளம்… டிஜே செய்த அட்ராசிட்டி… இதெல்லாம் எங்கபோய் முடியுமோ?

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான பொன்னியின் செல்வனுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

வென்றது சோழர் படை

வென்றது சோழர் படை

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் படத்துக்கு மக்களிடம் தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி

பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி

பொன்னியின் செல்வன் படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. வெளியானது முதலே வசூல் வேட்டை நடத்தி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளையும் முறியடித்து வருகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் வாரத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், வரும் நாட்களில் இந்தப் படத்தின் வசூல் இன்னும் உச்சம் தொடும் எனக் கூறப்படுகிறது.

ஏஆர் ரஹ்மானின் தரமான சம்பவம்

ஏஆர் ரஹ்மானின் தரமான சம்பவம்

கடந்த 30 ஆண்டுகளாக கலக்கி வரும் மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் காம்போ, பொன்னியின் செல்வன் படத்திலும் மிரட்டியுள்ளது. ஏஆர் ரஹ்மானின் இசையில் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வெரைட்டியாக உருவாகி இருந்தன. அதேபோல், பொன்னியின் செல்வன் படத்திற்கான பின்னணி இசையிலும் ரஹ்மான் வேறலெவலில் Goosebumps மொமண்ட் கொடுத்திருந்தார். பொன்னி நதி, சோழா சோழா, தேவராளான் ஆட்டம், ராட்சச மாமனே பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

நீச்சல் குளத்தில் பொன்னி நதி பாடல்

நீச்சல் குளத்தில் பொன்னி நதி பாடல்

பொன்னியின் செல்வன் படத்தின் இசைக்காக ஏஆர் ரஹ்மானுக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி பாடலை ரசிகர்கள் நீச்சல் குளத்தில் வைத்து குதுகளமாக கொண்டாடியுள்ளனர். தீம் பார்க் ஒன்றின் Swimming Pool-லில் மக்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது, டிஜே பொன்னி நதி பாடலை ஒலிக்க விடுகிறார். அதற்க்கு குளித்துக் கொண்டிருந்த ரசிகர்களும் கோரஸ் பாடி என்ஜாய் செய்கின்றனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X