விஜய்யுடனான பிரச்னை.. முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்.. சன் டிவி அந்த வேலைய செய்யாம இருக்குமா?

சென்னை: விஜய்யின் ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் இந்தப் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கின்றன. சிவாதான் இந்தப் போட்டியை உருவாக்கிவிட்டார் என்றெல்லாம் பலர் கொளுத்திப்போட்ட சூழலில்; அதெல்லாம் ஒன்றும் இல்லை என்பதையும், இரண்டு படங்களும் அடுத்தடுத்து வருவதற்கான பின்னணியில் என்ன நடந்தது என்பதையும் நேற்றைய பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் எஸ்கே விளக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகன் படம்தான் விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்தப் படத்தை திருவிழா போல் கொண்டாடுவதற்கு தயாராகியிருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள். நிச்சயம் பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்தும் என்றெல்லாம் நம்பியிருக்கிறார்கள். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் சிவகார்த்தியேனின் பராசக்தி படம் ஜனவரி பத்தாம் தேதி வருகிறது. எனவே அதை வைத்து விஜய்யை எதிர்க்கும் அளவுக்கு எஸ்கே வளர்ந்துவிட்டாரா என்று ஒருதரப்பினர் கேள்விகள் கேட்டார்கள்.

கொளுத்திப்போட்ட பலர்: முக்கியமாக யூடியூபில் பேசிய சிலரோ, 'ஜனநாயகனோடு மோதி தன்னுடைய மாஸை நிரூபிக்க வேண்டும் என பராசக்தி தயாரிப்பாளரிடம் சிவகார்த்திகேயன் சொன்னதால்தான் இந்தப் போட்டியே உருவானது' என்றெல்லாம் சிலர் கொளுத்திப்போட்டார்கள். அதை நம்பி விஜய் ரசிகர்களும், எஸ்கேவையும், அவரது ஃபேன்ஸையும் சோஷியல் மீடியாக்களில் எல்லை மீறி விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Fans Demand Sun TV Will Telecast Sivakarthikeyan s Full Speech in Parasakthi Audio Launch
Photo Credit:

விளக்கிய சிவகார்த்திகேயன்: ஆனால் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நேற்று சிவகார்த்திகேயன் பராசக்தி ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார். அந்த விழாவில் அவர், "நாங்கள் பராசக்தி படத்தை அக்டோபரில் ரிலீஸ் செய்வதற்குத்தான் நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் விஜய் அண்ணாவின் படம் அக்டோபரில் வருகிறது என சொன்னதால் நாங்கள் பொங்கலுக்கு சென்றோம். திடீரென ஜனநாயகன் படமும் பொங்கலுக்கு வருகிறது என்று சொன்னதும் நான் ஜெர்க் ஆகிவிட்டேன். உடனே தயாரிப்பாளர் ஆகாஷுக்கு ஃபோன் செய்து, ஜனநாயகன் படமும் பொங்கலுக்கு வௌர்கிறது. நாம் எந்த தேதிக்கு தள்ளி போகலாம் என்று கேட்டேன்.

ஏதோ ஒன்று டிஸ்டர்ப் செய்தது: அதற்கு ஆகாஷோ, 'நாம் முதலீட்டார்களுக்கு எல்லாம் பொங்கல் ரிலீஸ் என்று சொல்லிவிட்டோம். இதற்கு மேல் தள்ளிப்போனால் கோடை விடுமுறைக்குத்தான். அப்போது தேர்தல் வேறு வருகிறது என்றார். பத்து நாட்கள் விடுமுறை இருக்கிறது. எனவே பொங்கலுக்கு இரண்டு படங்கள் வரலாம் என்று சொன்னார். நானும் ஓகே என சொல்லிவிட்டேன். இருந்தாலும் ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது. உடனே விஜய் மேனேஜர் ஜெகதீஷுக்கு ஃபோன் செய்து, 'என்ன ப்ரோ ஜனநாயகன், பராசக்தி பொங்கலுக்கு வருகிறது என்று கேட்டேன். அவரோ, இரண்டு படங்கள்தானே ப்ரோ. தாராளமாக வரலாம். பிரச்னையில்லை என சொன்னார்.

விஜய் சொன்ன வாழ்த்து: நான் அதற்கு உங்களுக்கு பிரச்னை இல்லை. எனக்குத்தான் பிரச்னை. இது விஜய்யின் கடைசி படம் என்று சொல்கிறார்கள். நீங்கள் எதற்கும் விஜய் சாரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள் என சொன்னேன். அவரும் கேட்டுவிட்டு லைனில் வந்தார், 'ஒன்னும் பிரச்னை இல்லை. சூப்பரா பொங்கலுக்கு வரட்டும். எஸ்கேவுக்கு என் வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள் என சொன்னதாக கூறினார். இதுதான் நடந்தது. இடையில் சிலர் என்னென்னம்மோ பேசுகிறார்கள். என்ன செய்வது அவர்களுக்கு அது வன்மம், வியாபாரம். இது அண்ணன், தம்பி பொங்கல்தான்" என்றார்.

அந்த வேலையை செய்யக்கூடாது: சிவாவின் இந்தப் பேச்சு விஜய்யின் ரசிகர்களை கண்டிப்பாக சாந்தப்படுத்தும் என்றே தெரிகிறது. இந்நிலையில் சோஷியல் மீடியாவில் இன்னொரு பேச்சும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதாவது ஜனநாயகன் Vs பராசக்தி மோதல் திட்டமிட்டே உருவாக்கப்பட்டதில்லை என்பது சிவா விளக்கிவிட்டார். ஆனால் இன்று ஒளிபரப்பாகும் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதை சன் டிவி எடிட் செய்யாமல் போடுமா? அப்படி போடாவிட்டால் இந்தப் பிரச்னை இன்னும் வளர்ந்துகொண்டே செல்லும் என்பதுதான் உண்மை என கூறிவருகிறார்கள். பார்ப்போம் சன் டிவி என்ன செய்யப்போகிறது என்பதை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X