திறக்கப்பட்ட தியேட்டர்கள்.. மாஸ்டர் படத்திற்கு டிக்கெட் வாங்க திரண்ட ரசிகர்கள்.. வீடியோ!
சென்னை: தியேட்டர்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் திரையரங்குகள் பக்கம் படையெடுக்க தொடங்கிவிட்டனர்.
Recommended Video
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் திரையரங்க தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.

இதனால் திரையரங்க உரிமையாளர்களும் அதனை நம்பியிருந்த தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று முதல் திரையரங்குகளை திறக்கவும் 50% பார்வையாளர்களுடன் இயக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனை அறிந்த ரசிகர்கள் திரையரங்குகள் முன்னாள் குவிய தொடங்கிவிட்டனர். இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் என பலரும் திரையரங்குகள் பக்கம் படையெடுத்து வருகின்றனர்.
அவர்களில் பலரும் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகவில்லை என்று தெரியாமல் மாஸ்டர் படத்திற்கு டிக்கெட் வாங்க வந்ததாக தெரிவித்தனர். அதிலும் சில விஜய் ரசிகர்கள், பிகில் படத்தையாவது மீண்டும் ரிலீஸ் செய்யுங்கள் என கோரிக்கை விடுத்தனர்.
மேலு சிலர் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் மாஸ்க் அணிந்து, கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் திரையரங்குகள் முன்பு திரண்ட ரசிகர்கள் பிலிமி பீட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











