அந்த கானக்குயிலின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்த்துவிடமாட்டோமா.. வீட்டில் குவிந்த ரசிகர்கள்!

சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர்.

இசையுலகில் பல்வேறு சாதனைகளை படைத்த எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று காலமானார். தனியார் மருத்துவமனையில் 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார்.

தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தியாவின் பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார் எஸ்பி பாலசுப்ரமணியம். அவரது மறைவு நாடு முழுக்கவும் பல மொழி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு

அவரது உடல் நிலை மோசமடைந்த செய்தியை கேட்டதுமே ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து ஏராளமான ரசிகர்களும் அவருடைய பள்ளிப் பருவ நண்பர்களும், மற்றும் ஏராளமான ரசிகர்களும் காலை முதல் மருத்துவமனைக்கு திரண்டனர். இதனால் மருத்துவமனை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

திரண்ட ரசிகர்கள்

திரண்ட ரசிகர்கள்

எஸ்பிபி மரணமடைந்த செய்தியை கேட்டதும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரசிகர்கள் திரண்டனர். அங்கு பலரும் கதறி அழுததை காண முடிந்தது. வயதானவர்கள், இளம் பெண்கள், ஆண்கள் பெண்கள், திருமணமானவர்கள் என பலரும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர்.

கானக்குயிலின் முகம்

கானக்குயிலின் முகம்

எஸ்பிபியின் மறைவு தங்களின் வீட்டில் யாரோ இறந்ததை போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக கண்ணீர்மல்க கூறினர். கடைசியாக ஒரு முறை அந்தக் கானக் குயிலின் முகத்தை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்துடன் கண்ணீரும் கம்பளியுமாய் கூடியிருந்தனர் ரசிகர்கள்.

வராமலே போய்விட்டார்

வராமலே போய்விட்டார்

மருத்துவமனையில் இருந்து அவரது புகழ் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கேயும் அவரது முகத்தை காண குவிந்தனர் ரசிகர்கள். எப்படியும் மீண்டு வந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட எஸ்பிபி வராமலே போய்விட்டார்.

பலனிக்கவில்லை

பலனிக்கவில்லை

கோடிக்கணக்கான ரசிகர்கள் செய்த கூட்டுப்பிரார்த்தனை கை கொடுக்கவில்லை. உயர் தர சிகிச்சையும் பலனளிக்கவில்லை. இயற்கை அன்னையும் கைவிட இயற்கையோடு கலந்துவிட்டார் எஸ்பிபி. அவரது இடத்தை அவரது இடத்தை அவரே மீண்டு வந்து நிரப்பினால்தான் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X