என்ன பாஸ் இப்படி புஷ்ஷ்ன்னு ஆக்கிட்டிங்களே...பாவனி குடும்பத்தால் எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ல் அதிகம் கிசுகிசு பேசப்பட்டதும், சர்ச்சையில் சிக்கியதும் பாவனி தான். தாமரையிடம் இருந்து சுருதி காயினை திருடுவதற்கு உதவியது துவங்கி, அபினய் உடனான காதல், பிறகு அமீர் உடனான நெருக்கம் என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி, விமர்சிக்கப்பட்டு வருகிறார் பாவனி.
பாவனியை திட்டி பலர் விமர்சனங்கள் கூறி வந்தாலும், பாவனிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டமும் குறையாமல் தான் இருந்து வருகிறது. அபினய் ஆகட்டும், அமீர் ஆகட்டும் பாவனி ஸ்டிராங்காக நோ சொல்லாதது ஏன் என்பது தான் நெட்டிசன்கள் அதிகம் கேட்கும் கேள்வியாக இருந்து வருகிறது. இதற்கிடையில் அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்த விவகாரமும் பெரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

கமல் கூட கேட்கவில்லையே
அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்தது பற்றி பிக்பாசோ, கமலோ பேசாமல் இருக்கும் நிலையில் இந்த வாரம் ஃபிரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. இதனால் முந்தைய சீசன்களில் லாஸ்லியாவின் தந்தை வந்து கவின் உடனான காதலை கேட்டு கோபப்பட்டது, கடந்த சீசனில் ஷிவானியின் அம்மாவும் பாலாஜியுடனான காதலை பற்றி பேசி கடுமையாக கோபத்தை வெளியிப்படுத்தினார்.

சம்பவத்தை எதிர்பார்த்த ரசிகர்கள்
அதே போல் இந்த சீசனில் பாவனியின் குடும்பத்தினர் வந்து, அமீர் உடனான காதல் பற்றி பேசி, ஒரு முடிவுக்கு கொண்டு வருவார்கள். ப்ரோமோவில் பாவனியின் குடும்பம் வருவதை காட்டியதால் இன்று ஒரு தரமான சம்பவம் காத்துக் கொண்டிருக்கிறது என நினைத்து, ரசிகர்கள் ஆர்வமாக பார்த்தார்கள். ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என பிக்பாஸ் சொல்வதை போல் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் ஏதும் நடக்கவில்லை.

பாவனி அக்கா சொன்னது என்ன
பாவனியிடம் பேசிய அவரது அக்கா, அமீரை நீ தம்பி என்று தான் கூப்பிடுகிறாய். ஆனால் அவன் உன்னிடம் பழகும் விதம் உன்னை தப்பாக காட்டுகிறான். ஆனால் நீ தவறாக ஏதும் நடக்கவில்லை என பட்டும் படாமல் சாஃப்டாக பேசி விட்டு சென்று விட்டார். பாவனி குடும்பத்தினர்கள் வந்த காட்சிகளும் மிகக் குறைவாகவே காட்டப்பட்டது.

என்ன தான்ய்யா சொல்கிறார்
பாவனியின் அம்மா, அவரை நன்றாக இருக்கிறாயா என்று மட்டும் தான் கேட்டார். அதைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை. பாவனியின் அக்கா, போட்டியாளர்களிடம் அமர்ந்து பேசுகையில் ராஜு, சிபி, நிரூப் உள்ளிட்டோர் அமீர் பற்றி சொல்லுங்கள் என கேட்கிறார்கள். அப்போதும் அவர், அவரது டான்ஸ் ரொம்ப பிடிக்கும். நான் என்ன சொல்கிறேன் என அவருக்கு புரியும் என்கிறார். ஆனால் இவர்கள் எதை பற்றி, என்ன பேசிக் கொண்டார்கள் என கடைசி வரை யாருக்கும் புரியவில்லை.

ஃபீல் பண்ணிய அமீர்
ப்ரோமோவை பார்த்து விட்டு ஆவலாக காத்திருந்த ரசிகர்கள் எபிசோட்டை பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். பாவனியின் குடும்பத்தினர்கள் வந்து சென்ற பிறகு அமீர், உன்னை தவறாக காட்டி விட்டனோ என ஃபீல் பண்ணுகிறார். ஆனால் அப்போதும் இந்த பிரச்சனையை முடிக்காமல், மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்து விட்டு போகட்டும். ஆனால் நான் முதல் நாளில் உன்னை பார்த்தபடி தான் இப்போதும் பார்க்கிறேன் என்கிறார்.
Recommended Video

அட போங்கப்பா
இதற்கிடையில் லவ் சீன் நடித்துக் காட்டும் படி அமீர் மற்றும் பாவனியிடம் தாமரை சொல்கிறார். மற்ற போட்டியாளர்களும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போதும் மற்றவர்களை போல் நீயும் எனக்கு ஃபிரண்ட் மட்டும். ஒரு ஃபிரண்டாக உன்னை எனக்கு பிடிக்கும் என சிரித்தபடி சொல்கிறார் பாவனி. இதை பார்த்து, அட போங்கப்பா என ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











