KGF டீசருக்கு கால் தூசுக்கூட இல்லை.. பிரபாஸ் மூஞ்சிய காட்டவே பயப்படுறாரா.. பறக்கும் சலார் மீம்ஸ்!
சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கிறார் இந்த படமாவது பிரபாஸுக்கு பாகுபலிக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், அந்த படத்தின் முதல் டீசர் வெளியாகி ரசிகர்களை Disappointed ஹாஷ்டேக் போட வைத்து விட்டது.
பிரபாஸை காட்டுவார்கள் டீசரில் என காலங்காத்தாலே ரசிகர்கள் தூக்கத்தை விட்டு எழுந்து பார்த்தால், வயதான ஒரு தாத்தாவை காட்டி டீசரையே முடித்து விட்டார்களே என நெட்டிசன்கள் மீம் போட்டு வருகின்றனர்.
#SalaarTeaser very disappointed #Prabhas𓃵 #PrashanthNeel @shrutihaasan @SalaarTheSaga @IamJagguBhai pic.twitter.com/wfKDJ0v4Cb
— Ramdev Royals (@PragadaRamdev) July 6, 2023
மேலும், கேஜிஎஃப் டீசருக்கு கால் தூசுக்கூட இல்லை என்றும் ரசிகர்கள் இரண்டு படங்களின் டீசரையும் ஒப்பிட்டு ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
டிரெண்டாகும் டிஸப்பாயின்டட்: செவன் தர்ட்டி என்னை விட்டுப் போகாது என்பது போல பிரபாஸுக்கு அடுத்த ஹிட் எப்போது கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆதிபுருஷ் படத்தில் மீசை வைத்த ராமராக அவரை காட்டிய நிலையில், அவரது லுக் ரொம்பவே ட்ரோல் செய்யப்பட்டது.
To be Honest
— Nagendra Kumar (@Nagendra845401) July 6, 2023
KGF 2 Teaser >>>> Salaar Teaser
#SalaarTeaser Disappointed 😞
morning waste - ‘maza nahi aaya’
But hope trailer will be surprised 😯#SalaarTeaser #Salaar #Disappointed #storm #Prabhas𓃵 pic.twitter.com/XwvQ3Vd8hR
இந்நிலையில், சலார் படத்தின் டீசரில் ரொம்பவும் கவனமாக பிரபாஸின் முகத்தை மறைத்து விட்டார் இயக்குநர் பிரசாந்த் நீல் என கலாய்த்து வருகின்றனர். அதன் காரணமாக ரசிகர்கள் Disappointed ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
KGF கால் தூசுக்கூட இல்லை: நேர்மையா சொல்லணும்னா யஷ் நடித்த கேஜிஎஃப் டீசரின் கால் தூசுக்கூட பிரபாஸின் சலார் டீசர் இல்லை. பிரபாஸின் முகத்தைக் கூட காட்டாமல் ஓவர் பில்டப் செய்திருப்பது உடம்புக்கு ஆகாது என்றும் பிரபாஸுக்கு அடுத்த டிசாஸ்டர் லோடிங் என ரசிகர்கள் காண்டாகி கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பிரசாந்த் நீல் யூனிவர்ஸ்: கேஜிஎஃப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி நடந்த அதே இடத்தில் தான் சலார் படமும் உருவாகி உள்ளது என்பது படத்தின் டீசரிலேயே ரிவீல் செய்துள்ளனர். நிச்சயம் இந்த படம் கேஜிஎஃப் 2வை போலவே மிரட்டும் என ரசிகர்கள் டீகோடிங் செய்து வருகின்றனர்.
இவருக்கு இதுதான் வேலை: சலார் படத்தின் பிரபாஸுக்கு பில்டப் கொடுக்கும் டீசரில் நடித்துள்ளவர் நடிகர் டினு ஆனந்த். இவருக்கு இது தான் வேலை என நெட்டிசன்கள் சலார் டீசர் ஹீரோ யாரென்று கண்டு பிடித்து மீம்களை போட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











