த்ரிஷா, சயீஷாவை பார்த்தால் எப்படி தெரியுது: திருந்தவே மாட்டீங்களா ஆர்யா?
Recommended Video

சென்னை: ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊத்தியும் த்ரிஷா, சயீஷா விஷயத்தில் ஆர்யா திருந்துவதாக இல்லை.
கோலிவுட்டில் பல காலமாக ஹீரோயினாக நிலைத்து நிற்பவர் த்ரிஷா. நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இன்றும் இருக்கிறார். அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அவரை வாழ்த்தி ஆர்யா போட்ட ட்வீட் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
த்ரிஷா
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை டியர் குஞ்சுமணி த்ரிஷா. இந்த ஆண்டு வெளியாகும் உங்களின் படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று ஆர்யா ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள்
அது என்ன ஒரு நடிகையை குஞ்சுமணி என்று அழைப்பது என்று நெட்டிசன்ஸ் ஆர்யாவை விளாசியுள்ளனர். த்ரிஷாவை பற்றி ட்வீட்டும்போது எல்லாம் குஞ்சுமணி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார் ஆர்யா.
கடந்த ஆண்டும்
கடந்த ஆண்டும் த்ரிஷாவின் பிறந்தநாளுக்கு அவரை வாழ்த்தும்போது குஞ்சுமணி என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். இந்த ஆண்டும் அதே வார்த்தையை பார்த்த ரசிகர்கள் ஆர்யா நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். சிலரோ அவரை கலாய்த்துள்ளனர்.
சயீஷா
கஜினிகாந்த் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்துள்ள சயீஷா பற்றி ட்வீட்டும்போது எல்லாம் ஜூஸி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். அதை பார்த்துவிட்டு சயீஷா ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். ஒரு பொம்பள புள்ளையை பார்த்து ஜூஸி என்பது சொல்வது தப்பு என்று உங்களுக்கு தெரியலையா, இல்லை விளம்பரம் தேட இப்படி செய்கிறீர்களா என்று ரசிகர்கள் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

ட்வீட்
ஆர்யா முதன்முதலாக ஒரு புகைப்படத்தை போட்டு தான் சயீஷாவை ஜூஸி என்றார். அதை பார்த்து பலரும் கலாய்த்தனர். அதில் இருந்து ஜூஸி என்கிற வார்த்தையை கெட்டியாக பிடித்துக் கொண்டார் ஆர்யா.

மதிப்பு
இந்த ஆர்யாவுக்கு பெண்கள் மீது மதிப்பே இல்லையா. ட்விட்டரில் குஞ்சுமணி, ஜூஸி என்கிறார், டிவி நிகழ்ச்சியில் 16 பேருடன் கடலை போட்டுவிட்டு யார் மனதையும் புண்படுத்த விருப்பம் இல்லை என்று கூறி எந்த பெண்ணையும் திருமணம் செய்யாமல் எஸ்கேப் ஆகிவிட்டார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











