பிராக்டீஸ் வாட் யூ பிரீச்.. பாலாஜியை வழக்கம்போல் தடவிக் கொடுத்த கமல்.. கடைசியில இப்படி பண்ணிட்டாரே!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் ரொம்பவே அரோகெண்டாக நடந்து வரும் பாலாஜியை கமல் கடுமையாக கண்டிக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஆரிக்கும் பாலாஜிக்கும் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேண்டுமென்றே பாலாஜி, ஆரியிடம் வலுக்கட்டாயமாக சென்று சண்டைபோட்டார். அவரை அவமதிக்கும் வகையில் மோசமான பாடி லாங்குவேஜை வெளிப்படுத்தினார்.

பிராக்டீஸ் வாட் யூ பிரீச்

பிராக்டீஸ் வாட் யூ பிரீச்

இதனால் இருவருக்கும் இடையில் தகாத வார்த்தைகள் மற்றும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தை நேற்று கையில் எடுத்த கமல், பாலாஜி சொன்ன பிராக்டீஸ் வாட் யூ பிரீச் என்ற வசனத்தோடு ஆரம்பித்தார்.

சாதகமாக கூறிய பாலாஜி

சாதகமாக கூறிய பாலாஜி

இதனை தொடர்ந்து அன்று நடந்த பல சம்பவங்களை, குறிப்பாக தறுதலை என்று கூறி சம்யுக்தாவை ஏற்றிவிட்டது, அர்ச்சனாவிடம் பேசியது போன்ற விஷயங்களை தனக்கு சாதகமாக எடிட் பண்ணி கூறினார். இதனைக் கேட்ட கமல் இதையெல்லாம் மக்கள் பார்த்திருப்பார்கள் என்றார்.

ஆரி சொன்ன பதில்

ஆரி சொன்ன பதில்

மேலும் ஆரியிடம் நீங்கள் விட்டுக் கொடுத்தாக கூறினீர்களா என்று கேட்டார் கமல். அதற்கு ஆமாம் என்று கூறிய ஆரி, அவர் வெள்ளைக் கோட்டை தாண்டி வந்து விளையாடியதால், கோபம் வந்தது. அதனால் சண்டை வராமல் இருக்க அவரே வெற்றி பெறட்டும் என்று விட்டுவிட்டேன் என்றார்.

அப்போதே கேட்டிருக்கலாம்

அப்போதே கேட்டிருக்கலாம்

அதற்கு முன்பே எனக்கும் ரியோவுக்கும் இடையே ஒரு புரிதல் இருந்தது. அப்போது குரூப்பிஸம் குறித்து பேசியபோதுதான் இதை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் விட்டுக்கொடுத்தேன் என்பதை ரொம்பவே தயங்கிதான் கூறினேன். அப்போதே நான் செய்தது தவறு என்றால் என் சட்டையை பிடித்து கேட்க வேண்டியதுதானே, அதை ஏன் இப்படி எல்லாருக்கு முன்பும் வந்து கேட்டார் என்றார் ஆரி.

பாலாஜி தட்டிக்கெடுத்தார்

பாலாஜி தட்டிக்கெடுத்தார்

அதற்கு பதில் சொன்ன கமல், பாலாஜி செய்ததற்கும் நீங்கள் செய்ததற்கும் வித்தியாசம் உள்ளது. பாலாஜி சம்யுக்தா விஷயத்தில் சோமின் வெற்றியை தட்டிக் கெடுத்தார். ஆனால் நீங்கள் உங்களின் வெற்றியை விட்டுக்கொடுத்திருக்கிறீர்கள் என்றார்.

கிரெடிட் ஸ்டீலிங்

கிரெடிட் ஸ்டீலிங்

இதனால் கடுப்பான பாலாஜி, இது கிரெடிட் ஸ்டீலிங் இல்லையா என்றார். அதற்கு பதில் சொன்ன கமல், கிரெடிட் ஸ்டீலிங் இல்லை வெற்றியை மட்டுப்படுத்துதல் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார். மேலும் அவை நாகரிகம் ஒன்று உள்ளது என கூறி மேடை நாடகங்களில் நடிகர் மீது போடப்படும் லைட்டை விளக்கம் கொடுத்தார்.

தடவிக்கொடுத்த கமல்

தடவிக்கொடுத்த கமல்

உங்கள் மீது தற்போது அந்த லைட் போடப்பட்டுள்ளது. உங்களை 6 மில்லியன் ஜோடி கண்கள் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அவை நாகரிகத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்றார். பாலாஜி காலை நீட்டி பேசியது குறித்து கேட்காமல், வழக்கம் போல் பாலாஜியை தடவிக்கொடுத்தார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

மேலும் பொத்தாம் பொதுவாய் இருவருக்கும் சேர்த்தே அட்வைஸ் செய்தார். பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் கமல், அவரை வாய் வார்த்தையாக கூட கண்டிக்காமல் விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

Recommended Video

பெண்களை மட்டும் Target செய்யும் Aari ? | Filmibeat Tamil
கொம்பு சீவி விட்டு

கொம்பு சீவி விட்டு

மேலும் அதே சூட்டோடு, இருவரும் சேவ்டு என்றும் ஒன்றாக அறிவித்தார் கமல். இதைக் கேட்ட ரசிகர்கள் நிச்சயம், பாலாஜியை விட ஆரிதான் அதிக ஓட்டுக்களை பெற்றிருப்பார், ஆனால் பாலாஜியுடன் சேர்த்து ஆரியின் பெயரையும் சொல்லி, இருவரும் சமம் எனக்காட்டி மீண்டும் பாலாஜியை கொம்பு சீவி விட்டுள்ளனர் என குமுறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X