அடப்பாவிகளா.. 10அடி நடந்து வரவே மணி 2 ஆகிபோச்சே.. அப்போ பஞ்சாயத்து? புரமோவால் கடுப்பான ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்கும் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திப்பது வாடிக்கையான ஒன்று.

அந்த வகையில் இந்த பிக்பாஸ் சீசனில், கமல்ஹாசன் இன்று முதல் முறையாக போட்டியாளர்களை சந்திக்க உள்ளார். இதற்கான புரமோவை காலை முதல் எதிர்பார்த்திருந்தனர் ரசிகர்கள்.

இதற்கா இவ்ளோ நேரம்?

இதற்கா இவ்ளோ நேரம்?

ஆனால் ரொம்பவே தாமதமாக இன்று பகல் 2 மணிக்குதான் வெளியானது. அதிலும் கமல் நடந்து வருவதும், வெல்கம் ஸ்பீச் கொடுப்பது மட்டுமே இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் செம கடுப்பாகிவிட்டனர். இதற்கு தானா இவ்ளோ நேரம் என விஜய் டிவியை பந்தாடிவிட்டனர்.

அப்போ பஞ்சாயத்து?

அப்போ பஞ்சாயத்து?

கமல் பங்கேற்கும் முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் புரமோ லேட்டாக வந்ததை பார்த்து வாங்க!... வாங்க!... அடப்பாவிகளா... 10அடி தூரம் நடந்து வருவதற்கே மணி 12 ஆகிபோச்சே!... அப்போ பஞ்சாயத்து எப்போ? என கேட்டுள்ளார்.

ஃபினிஷிங் சரி இல்லையேப்பா!

ஃபினிஷிங் சரி இல்லையேப்பா!

மற்றொரு நெட்டிசனான இவர் புரோமைவை பார்த்து விட்டு
ஓப்பனிங் எல்லாம் நல்லாதான் இருக்குது... ஆனா உன்கிட்ட ஃபினிஷிங் சரி இல்லையேப்பா!!!!! நம்மவரே!!!!! என அவர் கடந்த சீசன்களில் போட்டியாளர்களை கண்டிக்காததை
குத்திக்காட்டியுள்ளார்.

சஸ்பென்சு இருக்குமோ?

சஸ்பென்சு இருக்குமோ?

புரமோவில் கமல்ஹாசன் நடந்து வருவதை பார்த்த இந்த நெட்டிசன், நம்ப ஆண்டவரு நடக்கிற வேகத்த பார்த்தா.. ஏதாவது சஸ்பென்சு இருக்குமோ! என டவுட்டாக கேட்டுள்ளார்.

ப்ரோமோ

ப்ரோமோ

புரமோவில் ஒன்றுமே இல்லை என்பதை சாடும் வகையில் இந்த நெட்டிசன், அடேய் இந்த ப்ரோமோவுக்கா இவ்வளவு நேரம் எடுத்துகிட்டீங்க.. இதுக்கு இந்த ப்ரோமோ போடாமலே இருந்து இருக்கலாம்.. மோசம் டா டேய் என்று கூறியிருக்கிறார்.

தூங்கிட்டாரு போல

தூங்கிட்டாரு போல

புரமோ வர இவ்ளோ தாமதமானதால் கடுப்பான இந்த நெட்டிசன், இதற்கு காரணம், ஆண்டவர் ரொம்ப நேரம் தூங்கிடாரு போல! என கமல்ஹாசனையே கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஐ லவ் ஹிம்

ஐ லவ் ஹிம்

கமல் ரசிகரான இந்த நெட்டிசன், ஏங்க பிக் பாஸ் கன்டெஸ்டன்ட மட்டும்தாங்க கலாய்ச்சி டெய்லி ப்ரோமோ பார்த்திட்டு டுவீட் போடுவேன், மத்தபடி ஆண்டவர்னு வந்துட்டா ஐ லவ் ஹிம்ங்க என ராஜா ராணி படத்தின் ஜெய் ஸ்டைலில் கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அந்த மொமெண்ட்

அந்த மொமெண்ட்

கமல் பங்கேற்ற முதல் புரமோவை பார்த்த அந்த நெட்டிசன், இதைத்தான் இவ்வளவு நேரமா ஒட்டிக்கிட்டு இருந்தியா மொமெண்ட்.. என புரமோ எடிட்டரை கேலியும் கிண்டலுமாய் வெளுத்துள்ளார்

அருமையான ஆடை

அருமையான ஆடை

மற்றொரு நெட்டிசனான இவர், கடந்த வாரம் வாங்கின திட்டுக்கு காஸ்ட்யூம் டிசைனர் உழைச்சிருக்காங்கனு தெரியுது!
அருமையான ஆடை.. இவர வச்சே ஓட்டுங்க அவ்ளோ தானா புரமோ எடிட்டர்ஸ் டீம் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.??

தப்ப தட்டி கேட்பாரு

தப்ப தட்டி கேட்பாரு

பிக்பாஸ் புரமோவை பார்த்த இவர், இந்த நடைக்கா இவ்வாளோ வெய்ட் பண்ணுனோம், கருத்து ஒன்னும் இல்லையே, தப்ப தட்டி கேட்பாரு வெய்ட்டிங் என டிவிட்டி தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X