கட்டணமும் ஜாஸ்தி.. கட்டுப்பாடுகளும் ஜாஸ்தி.. கபெ ரணசிங்கம் மீது கடும் அதிருப்தியில் ரசிகர்கள்!

சென்னை: க பெ ரணசிங்கம் படத்திற்கான கட்டணம் அதிகம் என்றும் எக்கச்சக்கமான டெக்னிக்கல் பிரச்சனைகள் வருவதாகவும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Recommended Video

G V PRAKASH தங்கச்சி நடிச்சிருக்காங்க | CLOSE CALL WITH DIRECTOR VIRUMANDI PART-02 |FILMIBEAT TAMIL

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கபெ ரணசிங்கம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று பகல் இப்படம் வெளியானது. சமீப காலமாய் ஓடிடி தளத்தில் வெளியான சில படங்கள் சோபிக்காத நிலையில் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது.

அதிக கட்டணம்

அதிக கட்டணம்

ஆனால் படத்திற்கான கட்டணம் ரசிகர்களை தலைசுற்ற வைத்துள்ளது. அதாவது படத்தை ஒரு முறை பார்க்க 199 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண தொகை தியேட்டர் கட்டணத்தை காட்டிலும் ரொம்பவே அதிகம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 காலாவதியாகி விடும்

காலாவதியாகி விடும்

மேலும் ஒரு முறை படத்திற்கு கட்டணம் செலுத்தி பார்க்க தொடங்கி விட்டால் அடுத்த 6 மணி நேரத்திற்கு மட்டுமே படம் பார்க்க முடியும் என்றும் அதன் பிறகு அந்த கட்டணத்தொகை காலாவதியாகி படத்தை பார்க்க இயலாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

டெக்னிக்கல் பிரச்சனை

டெக்னிக்கல் பிரச்சனை

அதேபோல் படத்தை பணம் கட்டி ஒரு முறை புக் செய்தால் 48 மணி நேரத்திற்குள் மட்டுமே படத்தை பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதோடு மட்டுமின்றி இதையெல்லாம் மீறி படத்தை பார்த்தால் இடையிடையே பல டெக்னிக்கல் பிரச்சனைகள் வருவதாகவும் படம் ப்ளே ஆவதில் தடை ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரசிகர்கள் முடிவு

ரசிகர்கள் முடிவு

படம் ரிலீஸ் ஆகி 2 மணி நேரத்திற்குள்ளேயே தமிழ் ராக்கர்ஸ் படத்தை தங்களின் சைட்டில் ரிலீஸ் செய்துள்ளனர். கட்டணமும் அதிகம் கட்டுப்பாடுகளும் அதிகம் என்பதால், தமிழ் ராக்கர்ஸ்லேயே படத்தை பார்க்கப் போகிறோம் என பகிரங்கமாக கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X