விஜய்க்கு 80, அஜீத்துக்கு 90, மகேஷ் பாபுவுக்கு 100 அடி கட் அவுட் வைத்த ரசிகர்கள்

By Siva

சென்னை: தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் நே ஒக்கடினே படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி அவருக்கு அவரது ரசிகர்கள் 100 அடி கட் அவுட் வைத்துள்ளனர்.

தமிழக ரசிகர்கள் விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத் குமாரின் வீரம் படம் இன்று ரிலீஸான மகிழ்ச்சியில் உள்ளனர். இதே போன்று ஆந்திர மாநில ரசிகர்களும் இன்று குதூகலமாக உள்ளனர்.

அதற்கு காரணம் மகேஷ் பாபுவின் நே ஒக்கடினே படம் இன்று ரிலீஸாகியிருப்பது தான்.

கட் அவுட்

கட் அவுட்

நே ஒக்கடினே ரிலீஸானதையொட்டி மகேஷ் பாபுவின் ரசிகர்கள் அவருக்கு ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் 100 அடியில் கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.

அஜீத்

அஜீத்

வீரம் படம் இன்று ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. முன்னதாக நெல்லையில் உள்ள பாம்பே தியேட்டர் முன்பு அஜீத்துக்கு 90 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டது.

விஜய்

விஜய்

விஜய்யின் ஜில்லா படமும் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் பைலட் தியேட்டர் முன்பு விஜய்க்கு 80 அடி கட் அவுட்டை வைத்து ரசிகர்கள் அதற்கு பாலாபிஷேகமும் செய்துள்ளனர்.

கர்நாடகா

கர்நாடகா

மகேஷ் பாபுவின் படமும் இன்று ரிலீஸானதால் வீரம் மற்றும் ஜில்லாவுக்கு கர்நாடகத்தில் அதிக தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த கட் அவுட் கலாச்சாரத்தை அரசியல்வாதிகள் விட்டாலும் ஸ்டார்கள் விடப் போவதில்லை...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X