வேதிகா மேல பாலை ஊத்தி.. ஜெய் ஜெய் பாலய்யா.. கெத்து காட்டும் ரூலர்!

ஹைதராபாத்: நடிகை வேதிகாவுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்துள்ள படம் 'ரூலர்'. இந்தப் படம் கடந்த 20ஆம் தேதி ரிலீஸானது.

ஹாப்பி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் பாலகிருஷ்ணாவின் 105-வது படம் ஆகும். 2018ல் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்து வெளியான 'ஜெய் சிம்ஹா' திரைப்படம் பெரும் வெற்றிப்பெற்றது.

படுதோல்வி

படுதோல்வி

இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான 'என்.டி.ஆர்' பயோபிக் படத்தின் இரண்டு பாகங்களும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதோடு மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது.

வேதிகா ஜோடி

வேதிகா ஜோடி

இந்நிலையில் ரூலர் படத்தின் மூலம் கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்துள்ளார் பாலகிருஷ்ணா. இந்தப்படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார்.

பாலாபிஷேகம்

பாலாபிஷேகம்

'ரூலர்' படத்தில் பாலகிருஷ்ணா போலீஸாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடித்த வேதிகாவுக்கு அவரது ரசிகர்கள் பாலாபிஷேகம் நடத்தியுள்ளனர்.

ஜெய் பாலைய்யா

ஜெய் பாலைய்யா

படத்தின் பேனருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் நடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. பாலாபிஷேகம் நடத்தும் ரசிகர்கள் ஜெய் பாலைய்யா ஜெய் பாலைய்யா என முழக்கமிட்டு வருகின்றனர்.

நடிகர்கள்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே பாலாபிஷேகம் நடத்தப்பட்டு வந்த நிலையில் ஓ பேபி படத்தின் போது நடிகை சமந்தாவுக்கு பாலாபிஷேகம் செய்தனர். அவரை தொடர்ந்து தற்போது நடிகை வேதிகாவுக்கு பாலாபிஷேகம் நடத்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X