மோசமான படங்களை சப்போர்ட் பண்ணாதீங்க... ஒரே மாதிரி பேசிய கமல்ஹாசன் மற்றும் சூர்யா!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் இப்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்

சூரரைப் போற்று, ஜெய்பீம்,எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடித்து வருகிறார்

தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகர்களாக உள்ள கமல்ஹாசன் மற்றும் சூர்யா மோசமான படங்களை பற்றி ஒரே மாதிரி கருத்தை பேசியுள்ள வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகிறது.

முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை

முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை

மாநகரம்,கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்பொழுது கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றதை தொடர்ந்து தயாரிப்பு பணிகள் விறு விறு வேகத்தில் நடைபெற்று கொண்டுள்ளது

பாலியல் வன்கொடுமை பற்றி

பாலியல் வன்கொடுமை பற்றி

சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற தரமான படங்களை கொடுத்தவர் சூர்யா. சமீபத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருப்பார். மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்த இந்தப் படம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றி பேசியது. கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளையும் பற்றி ஆணித்தரமாக பேசியுள்ள இந்த படம் குடும்ப ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் பாலா இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

ஒரே மாதிரி கருத்தை

ஒரே மாதிரி கருத்தை

கமல்ஹாசன் மற்றும் சூர்யா என இருவரும் நடிப்புக்கு பெயர் போனவர்கள். இவர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கமல் ஹாசன் மற்றும் சூர்யா மோசமான படங்கள் குறித்து ஒரே மாதிரி கருத்தை பேசியுள்ளனர்.

தகுந்த இடத்தில் வைக்க வேண்டும்

தகுந்த இடத்தில் வைக்க வேண்டும்

அதில் இருவரும் பேசி உள்ளது.. நாங்கள் நடிக்கும் படங்கள் நன்றாக இருந்தால் எப்படி சிறந்த படங்களை தூக்கி பிடிக்கின்றோமோ அதைப்போல சிறப்பில்லாத படங்களை அதற்கு தகுந்த இடத்தில் வைக்க வேண்டும். எனவே இது மோசமான படம், டப்பா என நீங்கள் ரசிகர்கள் ஓபனாக சொல்ல வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார். அதேபோல சூர்யாவும் நல்ல படம் பண்ணா அத ஜெயிக்க வைங்க..

Recommended Video

Etharkkum Thunindhavan Review | ET Review | Yessa ? Bussa ? | Suriya |Priyanka Arul Mohan|Pandiraj
ஜெயிக்க வைக்காதீங்க

ஜெயிக்க வைக்காதீங்க

மோசமான படம் பண்ணா அது நான் பண்ணியிருந்தாலும் ஜெயிக்க வைக்காதீங்க ஓட வைக்காதீங்க அப்பதான் நான் இன்னும் நல்ல படம் கொடுக்க முடியும் இன்னும் பெட்டர் கதையை தேடி ஓட முடியும் தயவுசெய்து நல்ல படம் பண்ணா மட்டும் ஜெயிக்க வைங்க அது போதும். என சூர்யா மற்றும் கமல்ஹாசன் மோசமான படங்கள் குறித்து ஒரே மாதிரி கருத்தை பேசியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X