உண்மையிலேயே 'வெறித்தனம்' லீக்கானதா? அல்லது 'விஸ்வாசத்திற்காக' லீக் செய்யப்பட்டதா? குழப்பமா இருக்கே!
Recommended Video
சென்னை: பிகில் படத்தில் இருந்து வெறித்தனம் பாடல் லீக்கானது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
பிகில் படத்திலிருந்து தொடர்ந்து காட்சிகளும பாடல்களும் லீக்காவது வாடிக்கையாகிவிட்டது. அண்மையில் அப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடலின் சிங்கிள் ட்ராக் லீக்கானது.
இதேபோல் படத்தில் விஜய் கால்பந்த கோச்சாக நடித்த விஜயின் ஐடி கார்டு, விஜயின் பைக் ஓட்டும் காட்சி என லீக்காகி இணையத்தை சூடாக்கியது. அந்த வகையில் நேற்று அப்படத்தின் வெறித்தனம் பாடல் லீக்கானது.

லீக் செய்யப்பட்டதா?
இந்த பாடல் லீக்கானதா அல்லது விஸ்வாசத்திற்காக லீக் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது நடிகர் அஜித் இயக்குநர் சிவா கூட்டணியில் நான்காவதாக வெளியான படம் விஸ்வாசம்.

பொங்கல் ரிலீஸ்
கடந்த பொங்கலுக்கு ரிலீஸான இந்த படத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமய்யா, யோகி பாபு, ரோபோ சங்கர் என பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

யூடியூப்பில் சாதனை
இந்த படம் தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் பாடல்கள், டிரைலர், டீசர் ஆகியவை யூடியூப்பில் சாதனை படைத்தது.

விஸ்வாசம் சாதனை
இந்நிலையில் 2019ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை ட்விட்டரில் அதிக ஹேஷ்டேக் பயன்படுத்திய பெயர்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் முதல் இடத்தை பிடித்து விஸ்வாசம் சாதனை படைத்துள்ளது.

போட்டிக்கு ஹேஷ்டேக்
இதை அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து கொண்டாடினர். பல ஊடகங்களிலும் இந்த தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து வெறித்தனம் பாடல் லீக்கானதாக கூறி வெறித்தனம் லீக்டு என விஜய் ரசிகர்கள் ட்ரென்ட் செய்தனர்.

சூடான டிவிட்டர்
வேண்டுமென்ற விஸ்வாசத்திற்காக வெறித்தனம் பாடலை லீக் செய்து அதுபோன்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்தனரா என்று நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். எப்படியோ விஸ்வாசம் மற்றும் வெறித்தனத்தால் டிவிட்டர் தளம் நேற்று படு சூடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











