Tamil New year :தமிழ் புத்தாண்டு ரிலீஸ் படங்கள்.. ரசிகர்கள் பார்க்க விரும்பும் படம் எது தெரியுமா?
சென்னை : ஒவ்வொரு விழாக்காலத்தையும் அதன் விடுமுறையையும் மையமாக கொண்டு அதிகமான படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்றுதான்.
அந்தவகையில் இந்த தமிழ்ப் புத்தாண்டில் அதிகமான படங்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளன.
குறிப்பாக அருள்நிதி, ராகவா லாரன்ஸ், விஜய் ஆண்டனி உள்ளிட்டவர்கள் படங்கள் இந்த தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகவுள்ளன.

தமிழ் புத்தாண்டு படங்கள் : முன்னணி நடிகர்கள் எப்போதும் தங்களது படங்களை விழாக்காலங்களில் வெளியிடவே அதிகமான விருப்பம் தெரிவிப்பார்கள். காரணம் இந்த காலகட்டங்கள், என்டர்டெயின்மெண்டிற்கு நேரம் ஒதுக்க ரசிகர்கள் அதிகமாக விரும்புவார்கள். அதேபோல இந்த விழாக் காலங்களில் விடுமுறை கிடைக்கும், குடும்பத்தினருடன் அதிகமான நேரத்தை செலவழிக்க விரும்புவார்கள். அவர்கள் கைகளிலும் அதிகமான பணம் இருக்கும் என்பதால் குடும்பத்தினருடன் சினிமாவிற்கு செல்ல அவர்கள் விருப்பம் காட்டுவார்கள்.

அந்த வகையில், தீபாவளி, பொங்கல் காலகட்டங்களில் அதிகமான படங்கள் வெளியாகும். அதற்கு அடுத்ததாக, புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை போன்ற விழாக்காலங்களிலும் அதிகமான படங்கள் வெளியாகும். மற்ற காலகட்டங்களில் அதிகமாக படங்களை பார்க்கிறார்களோ இல்லையோ, விழாக்காலங்களில் குடும்பத்தினருடன் திரையரங்குகளில் ரசிகர்களை அதிகமாக பார்க்க முடியும்.

அந்த வகையில் இந்த தமிழ்ப் புத்தாண்டிலும் அதிகமான படங்கள் ரிலீசாகவுள்ளன. குறிப்பாக அருள்நிதியின் திருவின் குரல், ராகவா லாரன்சின் ருத்ரன், விஜய் ஆண்டனியின் தமிழரசன், ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி, சமந்தாவின் சாகுந்தலம், யோகிபாபுவின் யானை முகத்தான் ஆகிய படங்கள் இந்த தமிழ் புத்தாண்டில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியாகவுள்ளது. இந்தப் படங்களில், ஆக்ஷன் த்ரில்லர், காமெடி சரவெடி என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜானரில் வெளியாகவுள்ளது.
Recommended Video
இந்நிலையில், இந்தப் படங்களில் அதிகமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக, அதிகமான ரசிகர்கள் பார்க்க விரும்பும் படமாக அருள்நிதியினி திருவின் குரல் படம் காணப்படுகிறது. இந்தப் படம் 56.8 சதவிகிதத்துடன் ரசிகர்கள் பார்க்க விரும்பும் படமாக முதலிடத்தில் உள்ளது. இதேபோல ராகவா லாரன்சின் ருத்ரன் படம் 30.8 சதவிகிதத்துடன் ரசிகர்கள் பார்க்க விரும்பும் இரண்டாவது படமாக உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் சொப்பன சுந்தரி, தமிழரசன் ஆகிய படங்கள் உள்ளன. இந்த தமிழ் புத்தாண்டில், குடும்பத்தினருடன் திரையரங்குகளுக்கு படையெடுக்க ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர். இந்தப் படங்களின் புக்கிங் துவங்கியுள்ள நிலையில், புக்கிங்கும் அதிகமான அளவில் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படங்களில் எந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











