Actor Vijay: கில்லி பட கொண்டாட்டத்திற்கு ஒரு முடிவே இல்லையா.. பஸ் டான்ஸ் வரைக்கும் போயிட்டாங்களே!
சென்னை: நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கில்லி படம் கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி தமிழில் முதல் 50 கோடி ரூபாய் வசூலித்த படம் என்ற பெருமையை பெற்றது. இந்நிலையில் தற்போது 20 ஆண்டுகளை கடந்த நிலையில் இந்த படம் கடந்த 20ம் தேதி தமிழகத்தில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த படத்துடன் வெளியான மற்ற படங்களை புறந்தள்ளி கில்லி வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்தை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் சென்று கொண்டாடி வருகின்றனர். குறிப்பிக 18 முதல் 22 வயது வரையிலான இளம் தலைமுறை ரசிகர்களை திரையரங்குகளில் பார்க்க முடிகிறது. திரையரங்க வாயில்களில் மற்றும் பொது இடங்களிலும்கூட ரசிகர்கள் இந்த படத்தின் பாடல்களை வைத்து கொண்டாடி வருவதை பார்க்க முடிகிறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கில்லி படம் கடந்த 20ம் தேதி சர்வதேச அளவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கமல்ஹாசனின் வேட்டையான விளையாடு உள்ளிட்ட சில படங்கள் ரீ-ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்தள்ளன. இவை அனைத்தையும் தூக்கி சாப்பிடும் வகையில் தற்போது கில்லி படத்தின் ரிலீஸ் அமைந்துள்ளது. படத்தை விஜய்யின் மற்ற படங்கள் போலவே பர்ஸ்ட் ரிலீசாக நினைத்து ரசிகர்கள் திரையரங்குகளிலும் திரையரங்க வாயில்களிலும் பொது இடங்களிலும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜய் மற்றும் திரிஷா, பிரகாஷ்ராஜ் ஆஷிஷ் வித்யார்த்தி, ஜானகி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2004ம் ஆண்டில் வெளியானது கில்லி படம்.
கில்லி ரீ-ரிலீஸ்: தமிழகம் உள்ளிட்ட சர்வதேச இடங்களில் கில்லி ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சூழலில் இந்தப்படம் தற்போது வசூலில் மட்டுமில்லாமல் வரவேற்பிலும் மாஸ் காட்டி வருகிறது. எப்போதுமே விஜய்யின் படங்களை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி தீர்ப்பார்கள். அந்த வகையில் இந்த படத்தையும் திருவிழாவாகவே அவர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தில் வித்யாசாகர் இசையில் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த வகையில் தற்போது படத்தின் அனைத்து பாடல்களையும் மீண்டும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அப்படி போடு பாடல் மிகப்பெரிய வைபை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச அளவில் கொண்டாட்டம்: மேலும் திரிஷாவிற்கு இந்த படத்தில் ஷல்லல்லா என்ற அறிமுக பாடல் உண்டு. அந்த பாடலும் தற்போது பயங்கரமாக ட்ரெண்ட்டிங் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர் என அனைவரும் படத்தின் சூட்டிங் மற்றும் ரிலீசின் போது தங்களது அனுபவங்களை சிறப்பாக பகிர்ந்து வருகின்றனர். இந்தப் படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் பாடல்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களுடன் என்ஜாய் செய்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமில்லாமல் மலேசியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் இந்த கொண்டாட்டங்களை பார்க்க முடிந்தது.
ரசிகர்களின் பேருந்து டான்ஸ்: இந்நிலையில் தற்போது பேருந்து ஒன்று லைட்டிங்குடன் பிரகாசிக்க, ரசிகர்கள் கொக்கர கொக்கரக்கோ பாடலுக்கு மிகப்பெரிய அளவில் டான்ஸ் மூவ்மென்ட்சுடன் கொண்டாடியதை பார்க்க முடிந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விஜய்யின் கில்லி படத்தை வித்தியாசமாக பல முயற்சிகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கொக்கரக்கோ பாடலுக்கு விஜய் மற்றும் திரிஷா போலவே உடையணிந்து வந்த ரசிகர்கள் அந்த பாடலுக்கு திரையரங்கில் நடனம் ஆடியது வீடியோவாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் வெளியாகி ஏறக்குறைய ஒரு வாரத்தை கடந்த சூழலிலும் இன்னும் கொண்டாட்டங்கள் குறையவில்லை.


Click it and Unblock the Notifications











