'ஓ போடறதெல்லாம் இருக்கட்டும்.. கொஞ்சம் நல்ல டிரெஸ்சா போடுங்க..' ஹீரோயினை கலாய்க்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஸ்டைலான போட்டோவை ரசிகர்கள் கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.

Recommended Video

Actress Kiran Rathore glamorous pose goes viral | Gemini, Vikram, Kiran

சமூக வலைதளப் பக்கங்களில் தங்களது புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதை நடிகைகள் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த லாக்டவுனுக்குப் பிறகு இப்படி போட்டோ பதிவிடுவது அதிகரித்து இருக்கிறது. முன்பை விட இப்போது அதிக லைக்ஸ்களும் கிடைக்கின்றன.

நடிகை கிரண்

நடிகை கிரண்

இதனால் பல நடிகைகள் இதற்கு அடிமையாகி உள்ளனர். தினமும் ஒன்றிரண்டு போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதற்கும் கிடைக்கும் லைக்ஸ் மற்றும் புகழும் கமென்ட்களை அதிகமாக ரசிக்கின்றனர். அப்படி போட்டோஸ் பதிவிடும் நடிகைகளில் ஒருவர், முன்னாள் ஹீரோயின் நடிகை கிரண். இவர், சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்.

கமலின் அன்பே சிவம்,

கமலின் அன்பே சிவம்,

இந்த படத்தில் இடம்பெற்ற ஓ போடு பாடலும் கைவிரல்களை கண்களுக்கு அருகில் வைத்து விக்ரம் காட்டும் அசத்தல் ஸ்டைலும் அப்போது மாஸ் ஹிட். இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், சரத்குமாரின் திவான், அரசு, பிரஷாந்த் நடித்த வின்னர் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்து வந்தார்.

சர்வர் சுந்தரம்

சர்வர் சுந்தரம்

இவர், பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டனின் உறவினர். தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு வராததால் கேரக்டர் ரோலில் நடித்து வந்தார். கார்த்தியின் சகுனி, விஷாலின் ஆம்பள உள்பட சில படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்த கிரண், அடுத்தும் சில படங்களில் நடிக்க இருக்கிறார். இவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஓ போடு ஸ்டைலில்

ஓ போடு ஸ்டைலில்

கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவின. அவர் வெளியிட்டிருந்த வீடியோக்களும் பரவியது. அதற்கு ரசிகர்களும் கண்டபடி கமென்ட்களை அள்ளித் தெளித்திருந்தனர். இப்போது ஓ போடு ஸ்டைலில் கை விரல்களை காட்டியபடி ஸ்டைலாகப் போஸ் கொடுத்த போட்டோவை அவர் பதிவு செய்துள்ளார். இதற்கு ஓ போடு என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

அப்படியே இருக்கீங்க

அப்படியே இருக்கீங்க

இதற்கு ரசிகர்கள் பலர் கண்டபடி கமென்ட் அடித்துள்ளனர். சிலர், ஓ போடறதெல்லாம் இருக்கட்டும், முதல்ல நல்ல சட்டையா பார்த்து போடுங்க என்று கூறியுள்ளனர். சிலர், இன்னும் அந்த படத்துல பார்த்த மாதிரியே இருக்கீங்க என்று தெரிவித்துள்ளனர். பலர் அவர் அழகை புகழ்ந்து தள்ளியுள்ளனர். இன்னும் சிலர், அப்புறம் லாக்டவுன் எப்படி போகுது? என்று விசாரித்துள்ளனர்.

ஹாய் சொல்லுங்களேன்

ஹாய் சொல்லுங்களேன்

ஒருவர், செம அழகா இருக்கீங்க என்றும், தேவதை மாதிரி இருக்கீங்க, என்னோட சின்ன வயசு க்ரஷ் என்றும் அவரை கண்டபடி புகழ்ந்துள்ளார். சிலர், நாங்கள் உங்கள் தீவிர ரசிகர்கள், ஒரு ஹாய் சொல்லுங்களேன் என்று கேட்டுள்ளனர். இன்ஸ்டா லைவில் வாங்க கிரண்.. உங்ககிட்ட பேசணும் என்று சிலர் கூறியுள்ளனர். நடிகை கிரணின் இந்த ஓ போடு போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X