மொட்டை தலையில மொளகா அரைச்சா.. சும்மா இருக்க மாட்டான் சுரேஷு.. கெளப்பிவிடும் நெட்டிசன்கள்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் 4ம் சீசனின் 3ம் நாள் புரமோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Recommended Video

Anitha Vs Suresh நடந்தது என்ன? யாரு மேல தப்பு | Bigg Boss Tamil

இரண்டாவது புரமோவை பார்த்த ரசிகர்கள், அடடா.. சிறப்பான சம்பவமா இருக்கே என தங்கள் ரியாக்‌ஷன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மொட்டை தலை சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அனிதா சம்பத்துக்கும் நடந்த சண்டையை வச்சு செய்து வருகின்றனர்.

செம சண்டை

செம சண்டை

சுரேஷ் சக்கரவர்த்தியின் வயதுக்கு கொஞ்சமும் மரியாதை கொடுக்காமல், இறங்கி அடித்து வருகிறார் செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத். அவருக்கு நான் சற்றும் சளைத்தவன் இல்லை என சுரேஷும் இறங்கி சிக்ஸர் அடித்து வரும் புரமோவை ரசிகர்கள் வெறித்தனமாக ஷேர் செய்து, இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை காண ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

ட்ரிகர் செய்யும் அனிதா

ட்ரிகர் செய்யும் அனிதா

அனிதா சம்பத் தான் வேண்டுமென்றே சுரேஷ் சக்கரவர்த்தியை வம்பிழுத்து அவரை வைத்து கேம் ஆடுகிறார். சுரேஷ் சக்கரவர்த்தியை சீண்டி விட்டு சண்டை ஏற்படுத்தினார், தனது பக்கம் ரசிகர்கள் திரும்புவார்கள் என்கிற கேமை அவர் ஆடி வருகிறார் என சில நெட்டிசன்கள் அனிதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

மொட்டை தலையில மொளகா அரைச்சா

மொட்டை தலையில மொளகா அரைச்சா

மற்றொரு நெட்டிசன் சமையல் கலை வல்லுநர் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஆதரவாக, "மொட்டை தலையில மொளகா அரைச்சா.. பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டான் இந்த சுரேஷு" என பிக் பாஸ் போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தியின் போட்டோவை ஷேர் செய்து கமெண்ட் செய்துள்ளார்.

அடங்காத அங்கிள்

அடங்காத அங்கிள்

"அசராத அனிதா! அடங்காத அங்கிள்! பிக்பாஸ் இப்ப செம ஹாப்பி அண்ணாச்சி" என பிக் பாஸ் வீட்டுக்குள் சண்டை ஸ்டார்ட் ஆனதும் ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விட்டனர். சுரேஷ் சக்கரவர்த்தியின் ரசிகர் ஒருவர், அசராத அங்கிள், அடங்காத அனிதா என மாற்றி போட்டால் சரியாக இருக்கும் என இந்த ட்வீட்டுக்கு கமெண்ட் அடித்துள்ளதும் சுவாரஸ்யத்தை கூட்டி இருக்கிறது.

அவசரம் வேண்டாம்

அவசரம் வேண்டாம்

ஆனால், அனிதா ஆர்மியினர் அதுக்குள்ள யாரும் அவசரப்படாதீங்க, அனிதா பேசுறதுக்கு ஏதாவது சரியான காரணம் இருக்கும், வெயிட் பண்ணி பார்ப்போம் என அனிதா சம்பத்துக்கு ஆதரவாக கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். சிலர், நிச்சயம் இது அனிதா சம்பத்தின் கேம் பிளான் தான் என அழுத்தம் திருத்தமாக கூறி வருகின்றனர்.

இளிச்சவாயன் சிக்குனா

இளிச்சவாயன் சிக்குனா

"மொட்டை அடிச்சிக்கிட்டு இளிச்சவாயன் ஒருத்தன் சிக்குனா அனிதா மாதிரி ஆளுங்க மொட்டை மண்டைல தபலா (செய்தி) வாசிப்பாங்க போல." என்று இந்த நெட்டிசனும் அனிதா சம்பத்தையே டார்கெட் செய்துள்ளார். எல்லாத்துக்கும் கமல் சார் இந்த வார இறுதியில் குறும்படம் போட்டுக் காட்டினால் தான் உண்மை தெரியவரும் என்றும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

என்னடா அங்க சத்தம்

என்னடா அங்க சத்தம்

ஒரு பக்கம் சரியா கலவரம் நடந்து கிட்ட இருக்கிற நேரத்துல முதல் வார தலைவி ரம்யா பாண்டியன் வேடிக்கை பார்க்கும் காட்சியை போட்டு, என்னடா அங்க சத்தம் என ரம்யா பாண்டியன் கேட்பது போல இந்த தீவிர ரம்யா பாண்டியன் ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.

கிருஷ்ண பரமாத்மான்னு நினைப்பா

கிருஷ்ண பரமாத்மான்னு நினைப்பா

"டேய் மொட்ட உன் மனசுல என்ன பெரிய கிருஷ்ண பரமாத்மான்னு நினைப்பா" என இந்த நெட்டிசன் அனிதா சம்பத்துக்கு ஆதரவாக கமெண்ட் போட்டு சுரேஷ் சக்கரவர்த்தியை கிழித்து தொங்கவிட்டுள்ளார். சுரேஷ் சக்கரவர்த்தியால் தான் இந்த சீசனே விறுவிறுப்பாக செல்கிறது என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இரிடேட்

இரிடேட்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் எவிக்‌ஷனுக்கு தேர்வாகி உள்ள நடிகை சனம் ஷெட்டியின் போட்டோக்களை போட்டு, இவள பார்த்தாலே இரிடேட்டிங்கா இருக்கு மாப்ள என சிவகார்த்திகேயன், சூரி காமெடியை போட்டு கலாய்த்து வருகின்றனர். சனம் ஷெட்டியின் கதையை கேட்டு சிலர் அவருக்காக ஆறுதலாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X