அஜித்க்கு இன்னைக்கு ரேஸ் இல்லை.. ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகிறாரா? அது மட்டும் நடந்தா?

மலேசியா: நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் ஏற்கனவே மலேசியாவிற்கு சென்றுவிட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டிக்கெட்டுகள் வாங்கிய ரசிகர்கள் பலரும் தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவுக்கு சென்றுள்ளனர். இப்படி இருக்கும்போது, இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித் கலந்து கொள்வாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் தொழில் ரீதியாக போட்டியாளர்கள் என்றாலும், இருவருக்கும் இடையில் உள்ள நட்பு குறித்து பலரும் பாராட்டி பேசி உள்ளார்கள். இப்படி இருக்கும்போது, ஜன நாயகன் விஜயின் கடைசி படம் என்பதால், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அஜித் வருவாரா என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. குறிப்பாக அஜித் தற்போது தனது கார் ரேஸ் போட்டிகளுக்காக மலேசியாவில் தான் இருக்கிறார் என்பதால் அவர் கலந்து கொள்வாரா என்ற கேள்வி இருந்து வருகிறது.

Fans Expect Ajith Kumar Will Attend Vijay Jana Nayagan Audio Launch Event At Malaysia
Photo Credit:

அஜித் - விஜய்: அஜித் அண்மையில் அளித்த பேட்டியில், விஜய் குறித்த கருத்துக்களை சிலர் திரித்து பரப்புவதாக தெரிவித்தார். இதனால் விஜயின் அரசியல் வருகையை அஜித் வரவேற்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கும்போது, நடிகர் அஜித், ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டால், இது 2026 தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இப்படி இருக்கும்போது, நடிகர் அஜித்க்கு விஜய் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததாக எல்லாம் கூறப்படுகிறது. இதனால் அஜித் வருவாரா என்ற ஆவல் விஜய் ரசிகர்கள் மத்தியிலேயே உள்ளது.

வாய்ப்பு: இப்படி இருக்கும்போது, அஜித்திற்கு அவரது கார் ரேஸ் பந்தய அட்டவணையின் படி, இன்று எந்த போட்டியும் இல்லை. மேலும் அவர் மலேசியாவில் தான் உள்ளார் என்பதால் அஜித் கலந்து கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் அஜித் தனது படத்தின் புரோமோசனுக்கே வரமாட்டார். இதில் மற்றொரு நடிகரின் பட புரோமோசனுக்கு வருவார் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள். மொத்தத்தில் அஜித் இன்றைக்கு ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டால், அது தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சம்பவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Fans Expect Ajith Kumar Will Attend Vijay Jana Nayagan Audio Launch Event At Malaysia
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X