இப்ப நீங்க கோபப்பட்டு ட்வீட் பண்ணனும் கமல்

By Siva

சென்னை: இப்ப நீங்க கோபப்பட்டு ட்வீட் போடணும் ஆண்டவரே என்று ரசிகர்கள் கமல் ஹாஸனிடம் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டரில் அரசியல் பேசத் துவங்கிய கமல் ஹாஸன் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார். இந்நிலையில் தான் அரசியலில் நுழைய நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விஷால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

அவர் அறிவித்தால் இந்த தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் சும்மா இருப்பார்களா. விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் முறையிட்ட பிறகு ஏற்கப்பட்டு, மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

விஷால்

விஷால்

வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும் விஷால் ஓயவில்லை. தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து லைம்லைட்டிலேயே உள்ளார். ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு கூட இவ்வளவு முக்கியத்துவம் கிடைக்கவில்லை.

ட்வீட்

ட்வீட்

இங்கு இத்தனை களேபரம் நடந்தும் கமல் ஹாஸன் எதுவுமே தெரியாதது போன்றே அமைதியாக உள்ளார். ஆண்டவரே, இப்ப நீங்க கோபப்பட்டு ட்வீட் போடணும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கோரிக்கை

கோரிக்கை

உங்களுக்கு ஆதரவாக பேசி வந்த விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு அவர் அலைந்து கொண்டிருப்பது குறித்து ட்வீட் போடுங்க ஆண்டவரே என்கிறார்கள் ரசிகர்கள்.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

கமல் ஹாஸனோ ட்விட்டர் பக்கமே வரவில்லை. ஆதவ் கண்ணதாசனின் திருமண நிகழ்ச்சிக்கு மகள் ஸ்ருதி ஹாஸன், அவரின் காதலர் மைக்கேலுடன் வந்திருந்தார். அப்போது அரசியல் பேசவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X