இந்த மாத இறுதியில் தமிழில் தடம் பதிக்கவுள்ள Sony Liv.. ஆர்வத்தில் ரசிகர்கள்

சென்னை: சினிமா ரசிகர்கள் மத்தியில் Sony Liv பிரபல ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

இருந்த போதிலும் தென்னிந்திய ரசிகர்களை பெரிதாக ப்ரைம் வீடியோ, நெட்பிலிக்ஸ் கவர்ந்த அளவிற்கு Sony Liv கவரவில்லை.

அந்த குறையை போக்கும் வகையில் முக்கியமான சில தமிழ் படங்களை நேரடியாக OTT யில் வெளியிடவுள்ளது Sony Liv.

ரிலீசுக்கு முந்துகின்றன

ரிலீசுக்கு முந்துகின்றன

கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டை மீறி பரவி வரும் நிலையில் பல திரைப்படங்கள் பின் வாங்க தொடங்கியுள்ளன. கொரோனா இரண்டாம் அலையின் விளைவாக மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படங்கள் OTT ரிலீசுக்கு முந்துகின்றன.

ஆர்வத்துடன் ரசிகர்கள்

ஆர்வத்துடன் ரசிகர்கள்

தமிழில் ராக்கி, நெற்றிக்கண், வாழ், கசட தபற, கடைசி விவசாயி ஆகிய படங்கள் Sony Liv ல் நேரடியாக வெளியாகவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி 3 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள நரகாசூரன் திரைப்படமும் Sony Liv ல் வெளியாகவுள்ளது.

தேன் வெளியீடு

தேன் வெளியீடு

இந்நிலையில் இந்த மாத இறுதியில் Sony Liv தமிழில் தடம் பதிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில்

கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண்குமார், அபர்ணதி நடிப்பில் வெளியாகி பல விருதுகளை குவித்த தேன் திரைப்படம் Sony Liv ல் வெளிவரவுள்ளது என சொல்லப்படுகிறது.

ஜூலை மாதத்தில்

ஜூலை மாதத்தில்

இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சுந்தீப் கிஷன், ஆத்மிகா, ஷ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் நரகாசூரன். 3 வருடமாக ரிலிஸ் ஆகாமல் உள்ள இந்த படம் ஜூலை மாத தொடக்கத்திலேயே Sony Liv ல் வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Read more about: sony சோனி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X