தளபதி 66 படத்தைவிட மாஸ் காட்டும் தளபதி 67.. எப்ப சார் அறிவிப்பீங்க..ஆவலாய் கேள்வி கேட்கும் ரசிகர்கள்

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தளபதி 66 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

படம் ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில் படத்தின் அறிவிப்பு இன்னும் வெளியாகாததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. ஆனாலும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இதையடுத்து படத்தின் இயக்குநர் நெல்சனை ரசிகர்கள் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் அவர் அப்செட்டில் உள்ளார்.

வெற்றியை கொண்டாடிய விஜய்

வெற்றியை கொண்டாடிய விஜய்

ஆயினும் இந்தப் படத்தின் வெற்றியை நடிகர் விஜய் கொண்டாடினார். படக்குழுவினருக்கு விருந்து கொடுத்து அசத்தினார். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வம்சி டைரக்ஷனில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தளபதி 66 படம்

தளபதி 66 படம்

படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்து படத்தை பொங்கல் ரிலீசாக வெளியிட படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு முடிவெடுத்துள்ளார். இதையடுத்து இந்தப் படத்தின் சூட்டிங் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் சில போஸ்டர்கள் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழு அப்செட்டில் உள்ளது.

லோகேஷுடன் இணையும் விஜய்

லோகேஷுடன் இணையும் விஜய்

இந்நிலையில் விஜய் அடுத்ததாக தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றபோதிலும், இந்த தகவலை தனது பல பேட்டிகளில் லோகேஷ் உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அவரது விக்ரம் படம் வெளியாகி வசூல்வேட்டை நடத்தி வருகிறது.

கேரள ரசிகர்கள் கேள்வி

இந்நிலையில் கேரளாவில் லோகேஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்த படத்தின் பிரமோஷனுக்காக ரசிகர்களை சந்தித்தனர். இதன்போது கேக் வெட்டி கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சந்திப்பின்போது ரசிகர்களின் முதல் கேள்வியாக தளபதி 67 காணப்பட்டது. இதுகுறித்து லோகேஷ் உறுதிப்படுத்தியதும் அவர்களின் உற்சாகம் பன்மடங்காகியது.

கேரளாவில் விக்ரம் படம்

கேரளாவில் விக்ரம் படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் படம் கேரளாவில் 30 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்து வருகிறது. கேரளாவில் அதிகமான வசூலித்த தமிழ் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. கேரளாவில் ஏற்கனவே விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் உள்ள நிலையில், லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் இணையும் கூட்டணி

மீண்டும் இணையும் கூட்டணி

மாஸ்டர் படத்தில் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணி இருந்த நிலையில், அந்தப் படமும் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் கொடுத்தது. ஆனால் இந்தப் படத்திற்காக சில சமரசங்களை செய்துக் கொண்டதாகவும் ஆனால் தளபதி 67 படம் 100 சதவிகிதம் தன்னுடைய படமாகவும் இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கேங்ஸ்டர் படம்

கேங்ஸ்டர் படம்

மேலும் இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் தனுஷ் மற்றும் சமந்தா இணையவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், கேங்ஸ்டராக விஜய் நடிப்பாரா அல்லது கேங்ஸ்டரை அடக்கும் போலீசாக நடிப்பாரா என பல யூகங்கள் ரசிகர்களிடையே காணப்படுகிறது. ஆனாலும் ராயப்பன் போன்று விஜய்யை ஒரு கேங்ஸ்டராக பார்க்கவும் அவர்கள் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X