பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் எப்போ... ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை : விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீசாகும் என விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Recommended Video

The Most Tweeted Actors in South Indian Entertainment in 2021| Filmibeat

விஜய் நடித்து முடித்துள்ள பிரம்மாண்ட படமான பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் எழுதி, இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. பூஜா ஹெக்டே லீட் ரோலில் நடித்துள்ள இந்த படத்தில் செல்வராகவன், ஷைன் டாம் சாகோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிறந்த நாளில் ஃபஸ்ட்லுக்

பிறந்த நாளில் ஃபஸ்ட்லுக்

பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டன. அதற்கு பிறகு ஷுட்டிங் பற்றிய அப்டேட்கள் மட்டுமே வெளியாகி வந்தன. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

பீஸ்ட் ரிலீஸ் அப்டேட்

பீஸ்ட் ரிலீஸ் அப்டேட்

ஆனால் அதற்கு மாறாக விஜய் கருப்பு டி-ஷர்க் அணிந்து, முகத்தில் ரத்த காயங்களுடன் இருக்கும் புதிய போஸ்டர் மட்டுமே நேற்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டருடன் 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் பீஸ்ட் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டது.

ஃபஸ்ட் சிங்கிள் எப்போது

ஃபஸ்ட் சிங்கிள் எப்போது

இன்று பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்படுவது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதே சமயம் விரைவில் பொங்கலுக்கோ அல்லது அதற்கு முன்பாகவோ ஃபஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். புத்தாண்டை முன்னிட்டு ரிலீஸ் அப்டேட் மட்டும் வெளியிடப்பட்டதாம்.

இந்த பாடலா வர போகிறது

இந்த பாடலா வர போகிறது

பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிளாக அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதி, விஜய் சொந்த குரலில் பாடிய பாடல் தான் வெளியிடப்பட உள்ளதாம். இதனால் ரசிகர்கள் ஃபஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X