மச்சான் நடிச்சிருக்க படம்.. பார்ப்பாரா அஜித்.. பெத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. என்ன நடக்கபோகுதோ!
சென்னை: தனது மைத்துனர் நடித்துள்ள படத்தை நடிகர் அஜித் பார்ப்பாரா அவரது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இயக்குநர் மோகன் இயக்கத்தில் இன்று வெளியான படம் திரௌபதி. குறிப்பிட்ட இரு சமூகத்தினர் இடையே உள்ள நாடகக்காதல் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இப்படம்.
இந்த படத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒன்றாக உள்ளது. திரௌபதி படத்தை பிரபலங்கள் பலரும் பார்த்து வருகின்றனர்.

ஷாலினியின் அண்ணன்
இந்தப்படத்தில் நடிகையும், நடிகர் அஜித்தின் மனைவியுமான ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட் ரிஷிதான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் ரிச்சர்ட் ரிஷி. ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

கவனிக்கப்பட்ட ரிச்சர்ட்
ஆனால் அவரது திறமைக்கு இதுவரை எந்தப் படமும் தீனி போடவில்லை. இந்நிலையில் தமிழில் திரௌபதி படத்தின் ட்ரெயிலர் வெளியானதுமே கவனிக்கப்பட்டார். இப்படத்தின் மூலம் அவரின் மீதான எதிர்பார்ப்பும் கூடியது. இந்நிலையில் ஒரு கலைஞராகவும், மனைவியின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கணவராகவும் திரௌபதியில் அசத்தியிருக்கிறார் ரிச்சர்ட்.

அஜித் பார்ப்பாரா?
இந்நிலையில் ரிச்சர்டின் நடிப்பு பாராட்டப்பட்டு வரும் நிலையில் திரௌபதி படத்தை நடிகர் அஜித் பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே நடிகர் அஜித்துடன், திரௌபதி இயக்குநர் மோகன் எடுத்த போட்டோ வைரலானது. திரௌபதி ட்ரெயிலரை பார்த்துவிட்டு அஜித் வாழ்த்து கூறியதாகவும் தகவல் வெளியானது.

ரியாக்ஷன் எப்படி இருக்கும்?
ஆனால் அதனை மறுத்த இயக்குநர் மோகன் ஒரு ரசிகராக அஜித்துடன் 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த போட்டோ அது என தெரிவித்தார். இதனை தொடர்ந்தே அந்தப் பிரச்சனை ஓய்ந்தது. இந்நிலையில் அஜித் திரௌபதி படத்தை பார்ப்பாரா அவருடைய ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











