விக்ரம் போல மல்டி ஹீரோ சப்ஜெக்ட்.. முன்னணி நடிகர்களான விஜய், அஜித்திடம் எதிர்பார்க்கலாமா?

சென்னை: பேட்ட படத்தில் ரஜினி உடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா மற்றும் பாலிவுட் நடிகரான நவாசுதின் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள்.

விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக மிரட்டி இருப்பார். விரைவில் வெளியாகவுள்ள விக்ரம் படத்தில் கமல்ஹாசன் உடன் முன்னணி நடிகர்களான பகத் ஃபாசில், விஜய்சேதுபதி மற்றும் சூர்யா நடித்துள்ளனர்.

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரை சமமாக ஹீரோக்களாக வைத்து படத்தை கொடுத்திருப்பார். இப்படி தமிழ் சினிமாவில், பழையபடி ஈகோ கிளாஷ் இல்லாமல் மல்டி ஸ்டாரர் படங்கள் உருவாக விதையாக விக்ரம் அமையுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

வலிமை படத்திலும்

வலிமை படத்திலும்

நடிகர் அஜித்தின் வலிமை படத்திலும் டோலிவுட் ஹீரோ கார்த்திகேயாவை வில்லனாக போட்டு எடுத்து இருப்பார்கள். ஆனால், அஜித்துடன் இணைந்து அவருக்கு சமமான ரோலில் இன்னொரு முன்னணி நடிகர் நடிக்கும் வாய்ப்பு உருவாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மங்காத்தா படத்தில் அஜித்தும் அர்ஜுனும் இணைந்து மிரட்டி இருப்பார்கள். மங்காத்தா 2 படத்தில் அஜித்தும் விஜய்யும் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற ரசிகர்களின் கோரிக்கை நிறைவேறுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.

சரி சமம்

சரி சமம்

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருந்தாலும், டைட்டிலில் விஜய்சேதுபதிக்கு இடம் கொடுத்து இருப்பார் விஜய். ஆனால், ஹீரோ வில்லன் கான்செப்ட் இல்லாமல் இரு முன்னணி ஹீரோவுக்கும் சரிசமமான கதாபாத்திரத்தை கொடுத்து கூடிய விரைவிலேயே புதிய படங்கள் உருவாக வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கை. தளபதி 66 படத்திலும் முன்னணி தெலுங்கு நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக நானி நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க்கெட்டை விரிவுபடுத்த

மார்க்கெட்டை விரிவுபடுத்த

ஹாலிவுட் படங்களிலேயே பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து உலகளவில் தங்கள் படத்தை வசூல் ரீதியாக வெற்றி பெற முயற்சி செய்வார்கள். பான் இந்தியா, பான் வேர்ல்ட் என கனவுகளுடன் நகரும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களும் மல்டி ஸ்டாரர் படங்களில் நடித்தால் இது நிச்சயம் சாத்தியம் என்கின்றனர்.

விக்ரம் போட்ட கோடு

விக்ரம் போட்ட கோடு

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் என விக்ரம் படத்தை ஆரம்பிக்கும் போதே மல்டி ஸ்டாரர் படமாக மூன்று சிங்க முகங்களை காட்டி அட்டகாசத்தை ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ், கடைசியில் ஃபினிஷிங் டச்சாக சூர்யாவையும் உள்ளே கொண்டு வந்து விக்ரம் 3க்கும் அடிபோட்டு விட்டார். இந்த கோட்டை பிடித்துக் கொண்டு கோலிவுட்டில் பல முன்னணி நடிகர்களும் ஈகோ இன்றி போட்டி மனப்பான்மைகளை தூக்கி எறிந்து விட்டு ஒன்றாக இணைந்து நடிப்பார்களா? என்கிற கேள்வியும் நடித்தால் நல்லா இருக்குமே என்கிற ஆசையும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

தலைவர் 169

தலைவர் 169

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 169 படத்திலும் ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால், நிச்சயம் ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்.

மணிரத்னத்தின் முயற்சி

மணிரத்னத்தின் முயற்சி

இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் இயக்குநர் மணிரத்னம் தொடர்ந்து தனது படங்களில் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அக்னி நட்சத்திரம், மெளன ராகம், தளபதி, சமீபத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் மற்றும் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் இதனை முயற்சி செய்து வருகிறார். ஆனால், இன்னமும் விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து நடித்தால் அதன் வசூல் வேட்டை விண்ணை பிளக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X