மலேசியாவில் அஜித்.. தளபதி திருவிழாவிற்கு அழைப்பு போச்சா? நடப்பதெல்லாம் பார்த்தா சம்பவம் உறுதி போலயே?

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜன நாயகன். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கேவிஎன் புரெடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து வேலைகளை சிறப்பாக செய்து வருகிறது. இப்படி இருக்கையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அஜித் கலந்து கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது ஜன நாயகன் படத்திற்கான இசையை அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து தளபதி கச்சேரி என்ற பாடல் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை, மிகப் பெரிய திருவிழாவாக நடத்த படக்குழு முடிவு செய்ததால், பல நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விஜய் படங்களில் பணியாற்றிய பல இசைக் கலைஞர்கள், பாடகர்கள், பாடகிகள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Fans Expecting Ajith Will Come To Jana Nayagan Audio Launch as Thalapathy Thiruvizha At Malaysia
Photo Credit:

80 கோடி பிளான்: மிகவும் பிரமாண்டமாக நடத்தப்படுவதால், மொத்தம் 85 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் லெவல் ஒன்று இருக்கைக்கு, இந்திய மதிப்பில் ரூபாய் 6,443.48 கட்டணமும்,லெவல் இரண்டு இருக்கைக்கு ரூபாய் 4,291.40 ஆக கட்டணமும் லெவல் மூன்று இருக்கைக்கு ரூபாய், 2,135.42 என்று கட்டணமும் வசூலிக்கப்பட்டதாம். இந்த இசை வெளியீட்டின் மூலம் மட்டும் படக்குழு ரூபாய் 80 கோடிகள் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி திருவிழா: இப்படி இருக்கும்போது இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் அஜித் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது நடிகர் அஜித் தற்போது மலேசியாவில் தான் இருக்கிறார். அதுவும் அவரது கார் ரேஸ் பணிகள் மற்றும், இரண்டு விளம்பரப் படங்களில் நடிப்பதற்காக அஜித் மலேசியாவில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் வரும் 27ஆம் தேதி தளபதி திருவிழா அதாவது ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா, விஜய்யின் ஃபேர்வெல் நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அஜித்துக்கு படக்குழு சார்பில் தனி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஒரு பேச்சு ஓடிக் கொண்டுள்ளது.

Fans Expecting Ajith Will Come To Jana Nayagan Audio Launch as Thalapathy Thiruvizha At Malaysia
Photo Credit:

அஜித்துக்கு அழைப்பு: மேலும், அஜித்தின் பேட்டி மற்றும் அந்த பேட்டியில் விஜய்க்கு எதிராக நான் எந்த கருத்தும் சொல்லவில்லை என்று சொன்ன பின்னர், நடிகர் விஜய்யே தனிப்பட்ட முறையில், அஜித்துக்கு போன் செய்து, நன்றி தெரிவித்ததாகவும், அப்போது அஜித்துக்கு அவர் தரப்பில் இருந்து தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அஜித் மலேசியாவில் இருப்பதால் நிச்சயம் கலந்து கொள்வார் என்றும் பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் வெகு சிலரோ, அஜித் தனது படத்தின் புரோமோஷனுக்கே வரமாட்டார். இதில் விஜய் படத்தின் புரோமோசனுக்கு எல்லாம் வருவாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X