பிக்பாஸில் அவமதிக்கப்படும் சீனியர் சிட்டிசன்ஸ்.. கண்டிப்பாரா கமல்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் வயதில் மூத்தவர்கள் அவமதிக்கப்பட்டு வரும் நிலையில் இம்முறையாவது நடிகர் கமல்ஹாசன் அதனை கண்டிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளே பிக்பாஸ் வீடு களேபரமானது.

குறிப்பாக செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்துக்கும் சீனியர் நடிகரான சுரேஷ் சக்கரவர்த்திக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

பஞ்சாயத்தாக்கிய அனிதா

பஞ்சாயத்தாக்கிய அனிதா

வணக்கம் சொன்னால் எச்சில் தெறிக்கும் என்று சுரேஷ் சக்கரவர்த்தி சொன்னதை பெரிது படுத்திய அனிதா சம்பத், அந்த விஷயத்தை வைத்தே அவரை நோண்டிக் கொண்டிருந்தார். போதா குறைக்கு மற்ற ஹவுஸ்மேட்டுகளுடன் அதை சொல்லியும் பஞ்சாயத்தாக்கினார்.

குறும்படம் வேண்டும்

குறும்படம் வேண்டும்

முதல் நாள் இரவில் நடந்த அந்த விஷயத்தை மறுநாள் கிட்சனில் மீண்டும் எழுப்பினார். சுரேஷ் எவ்ளோவோ விளக்கம் அளித்தும் அதனை ஏற்காத அனிதா குறும்படம் போட வேண்டும் என ஒற்றைக் காலில் நின்றார். ஆனால் அதற்கெல்லாம் அசராத சுரேஷ் நெடும் படமே காட்டுகிறேன் என அசால்ட்டாய் நகர்ந்தார்.

மரியாதை கொடுக்காமல்

மரியாதை கொடுக்காமல்

இதனை எதிர்பாராத அனிதா சம்பத், தொடர்ந்து சுரேஷை சீண்டினார். குறிப்பாக கிட்சனில் பேசாதம்மா, நான் ஆரி பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்றார். ஆனால் அதையும் பெரிதுபடுத்திய அனிதா, பேசாதே என்று எப்படி சொல்லலாம் என சுரேஷ் சக்கரவர்தியின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் மல்லுக்கு நின்றார்.

விளம்பர வெறி

விளம்பர வெறி

புரமோவில் இடம் பெற வேண்டும் கன்டென்ட் கொடுத்தால் பிக்பாஸ் வீட்டில் சஸ்டெய்ன் ஆகலாம் என்ற எண்ணத்தில் தொடர்ந்து அழுது புலம்பினார் அனிதா. ஒரு சில இடங்களில் சுரேஷ் சக்கரவர்த்தியை நீ போ என்றும் மரியாதை குறைவாக பேசினார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இருந்த மொத்த மரியாதையையும் குறைத்துக் கொண்டார் அனிதா சம்பத்.

ரேகாவிடம் மல்லு

ரேகாவிடம் மல்லு

அனிதா சம்பத்தை பார்த்து புரமோவில் இடம்பிடிக்க ஆசைப்பட்ட சனம் ஷெட்டி நேற்று ரேகாவிடம் அதே வித்தையை காட்டினார். சமையலுக்கு உதவி செய்த ரேகாவை, விடா கொண்டன் கொடா கொண்டனாக விளாசி தள்ளினார். வம்பு சண்டையை விரும்பாத ரேகா, எவ்வளவோ புரிய வைக்க முயற்சி செய்தும் கேட்கவில்லை சனம் ஷெட்டி.

போன சீசன்களிலும்

போன சீசன்களிலும்

இதனை பார்த்து கொதித்த ரசிகர்கள், வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீனியர்கள் அவமதிக்கப்படுவது தொடர் கதையாகிவிட்டது என்றும் இதனை கமல் கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். கடந்த சீசனில் மோகன் வைத்யா, சேரன், கஸ்தூரி உள்ளிட்டோரை கவின், சாண்டி, லாஸ்லியா ஆகியோர் அவமதித்தனர்.

தவறை தட்டிக்கேட்பாரா?

தவறை தட்டிக்கேட்பாரா?

அதற்கு முந்தைய சீசனில் மும்தாஜ் அவமதிக்கப்பட்டார். அதற்கு முன்பு பாலாஜி அவமதிக்கப்பட்டார். அப்போதெல்லாம் கமல் கண்டித்திருந்தால் இப்போது இது தொடராது என கருத்து கூறி வருகிறன்றனர். இந்நிலையில் இன்று போட்டியாளர்களை சந்திக்க உள்ள கமல் தொடரும் இந்த தவறை கமல் தட்டிக் கேட்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X