இயக்குநர் மணிரத்னம் பிறந்தநாள்.. பொன்னியின் செல்வன் அப்டேட்டை எதிர்நோக்கும் ரசிகர்கள்.. வருமா?

சென்னை: லைகா சுபாஷ்கரன் பிறந்தநாளை முன்னிட்டு எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அதிரடியாக வெளியாகின.

Recommended Video

Maniratnam Interesting Facts |Maniratnam பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | #Celebrity |Filmibeat Tamil

ஜூன் 2ம் தேதியான நாளை இந்தியாவின் பெருமைமிகு இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

இந்நிலையில், #PonniyinSelvan ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ரசிகர்கள் ஏதாவது அப்டேட் கிடைக்குமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மணிரத்னம் பிறந்தநாள்

மணிரத்னம் பிறந்தநாள்

1956ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி மதுரையில் பிறந்த இயக்குநர் மணிரத்னம் தனது 66வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். 1983ம் ஆண்டு பல்லவின் அனு பல்லவி எனும் கன்னட படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான மணிரத்னம் 1985ம் ஆண்டு தமிழில் பகல் நிலவு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

வித்தியாசமான மேக்கிங்

வித்தியாசமான மேக்கிங்

ஹாலிவுட் ஸ்டைல் ஃபிலிம் மேக்கிங்கை அப்பவே தனது படங்களில் கொண்டு வந்தார் இயக்குநர் மணிரத்னம். காதல் படங்கள் என்றாலே இன்றளவும் தமிழ் சினிமாவில் மணிரத்னம் தான் முதலிடத்தில் உள்ளார் என்று சொல்லலாம். மெளன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டாள், ஆயுத எழுத்து, குரு, ராவணன், கடல், ஓகே கண்மணி, காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் என வித்தியாசமான மேக்கிங்கில் தமிழ் சினிமா ரசிகர்களையே வியந்து பார்க்க செய்தவர் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் வருது

பொன்னியின் செல்வன் வருது

தமிழ் சினிமாவிற்கு மேலும், பெருமை சேர்க்க வேண்டும் என்கிற முயற்சியுடன் பொன்னியின் செல்வன் படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார் மணிரத்னம். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நாளை இயக்குநர் மணிரத்னத்தின் 66வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது சின்ன க்ளிம்ஸ் ஆவது வெளியாகுமா? என்கிற பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதனை முன்னிட்டு #PonniyinSelvan ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X