மாஸ்டரின் மாஸ் போஸ்டரில் பிரபல நடன இயக்குனர்.. அந்த பிக் பாஸ்ல அடுத்த லெவல் போயிட்டாங்களே!

By

ஐதராபாத்: அந்த பிக் பாக்ஸில் ஆட்டம் பாட்டம் என்று களை கட்ட, இங்கு இன்னும் சின்னப்பிள்ளைங்க சண்டையில இருக்காங்களே என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆம் சீசன் ஆரவாரமாக அமர்க்களப்படுத்தி வருகிறது ரசிகர்களை.

சின்ன சின்ன புகார்கள், செல்லச் சண்டைகள் என இப்போதுதான் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது நிகழ்ச்சி.

எச்சில் தெறிக்கலையே

எச்சில் தெறிக்கலையே

வார இறுதி நாளான நேற்று, நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்களிடம் சிறிது நேரம் பேசிய கமல், முடித்துவிட்டு, 'நான் பேசும்போது எச்சில் தெறிக்கலையே' என்று போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் கிண்டலாகக் கேட்டார்.

கெக்கே பிக்கே

கெக்கே பிக்கே


இதற்கு மற்றொரு போட்டியாளர் அனிதா சம்பத் கெக்கே பிக்கே என சிரிக்கத் தொடங்கினார். 'அந்த வார்த்தைய கோவத்துல சொல்லிட்டேன். அதை சொல்லியிருக்கக் கூடாது' என்றார் சுரேஷ். அடுத்து நடிகை சனம் ஷெட்டி, சரமாரியாக பேசினார் தனது நிலைமை பற்றி. பிறகு சில புகார்களையும் சொன்னார்.

ஆட்டம் பாட்டம்

ஆட்டம் பாட்டம்

இன்றும் போட்டியாளர்களைச் சந்திக்கிறார் கமல்ஹாசன். என்ன நடக்குமோ? காத்திருக்கிறார்கள், போட்டியாளர்களும் ரசிகர்களும். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்படி புகார், மோதல், கோபம் என சென்றுகொண்டிருக்க, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம் என அடுத்தக் கட்டத்துக்குச் சென்று இருக்கிறது.

ரேஸ்குர்ரம் டான்ஸ்

ரேஸ்குர்ரம் டான்ஸ்

இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்குகிறார். இன்றைய நாளுக்கான புரமோவை, வெளியிட்டிருக்கிறது தெலுங்கு ஸ்டார் மா சேனல். அதில் அல்லு அர்ஜூனின் ரேஸ் குர்ரம் பட வசனத்தை பேசியபடி ஒருவர் டான்ஸ் ஆட, மற்றவர்கள் நடிக்க, விரட்ட என அமர்க்களமாக இருக்கிறது நிகழ்ச்சி.

மாஸ்டர் மாஸ்

மாஸ்டர் மாஸ்

கூடவே சில ஜாலி, கேலி போஸ்டர்களும் இடம்பெறுகிறது புரமோவில். விஜய்யின் மாஸ்டர் பட மாஸ் போஸ்டரில் விஜய்க்குப் பதிலாக, நடன இயக்குனரும் டைரக்டருமான அம்மா ராஜசேகர் இருக்கிறார். மற்ற தெலுங்கு பட போஸ்டர்களில் நடிகர் அபிஜித், நடிகை மோனல் கஜ்ஜார் உள்பட பலர் இருக்க, கைதட்டல் பறக்கிறது.

எப்ப பார்க்கலாம்?

எப்ப பார்க்கலாம்?

பிறகு மொத்த டீமும் நடிகர் நாகர்ஜூனாவுடன் டான்ஸில் களமிறங்குகிறது. தெலுங்கு பாடல் ஒன்றுக்கு ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்கள், கலக்கலாக. தமிழ் பிக்பாஸில் இதுமாதிரி ஜாலி கொண்டாட்டத்தை எப்ப பார்க்கலாம்? என்று ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X