Thalapathy Thiruvizha: தளபதி எடுத்த முடிவு.. சீக்கிரமே அஜித்தை சந்திக்க பிளான்? சம்பவம் உறுதி போலயே

சென்னை: நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் கடைசி படமான ஜன நாயகன் படம் வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல்கள் இல்லை என்றாலும் படத்தின் வசூல் எந்த அளவுக்கு இருக்கும் என்ற கேள்வி திரையுலகில் இருக்கத்தான் செய்கிறது. இப்படி இருக்கும்போது ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் அஜித் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது ஜன நாயகன் விஜயின் கடைசி படம். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் விஜய்க்கு ஒரு ஃபேர்வெல் பார்ட்டி போல நடத்த திட்டமிட்டு தளபதி திருவிழா என்ற பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மட்டும் இல்லாமல் பல திரைப்பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Fans Expecting Vijay Should Invite Ajith For Thalapathy Thiruvizha Event Jana Nayagan Audio Launch
Photo Credit:

தல - தளபதி: இப்படி இருக்கும்போது நடிகர் அஜித் தற்போது மலேசியாவில் கார் ரேஸில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனால் அஜித்தை இந்த விழாவில் கலந்து கொள்ளச் சொல்லி அழைக்கவும் விஜய் விரும்புவதாகவும், அஜித் அண்மையில் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்த கருத்துக்கள் விஜய்க்கு எதிராக இருப்பதாக சிலர் தெரிவித்தனர். உடனே அஜித் தான் விஜய்க்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று விளக்கம் அளித்தார். அதற்காக நன்றி சொல்லவும் விஜய் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பு: இது மட்டும் நடந்தால் அஜித் இந்த நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாம் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் அஜித் தனது படத்தின் புரோமோசனுக்கே வர மாட்டார், இதில் விஜயின் பட புரோமோசனுக்கு வருவாரா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. ஆனாலும் இது புரோமோசனைக் கடந்து விஜய்க்காக ஃபேர்வெல் பார்ட்டியாக நடக்கவுள்ளதால், அஜித் கலந்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கிசுகிசுவாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்க கூடிய இந்த சம்பவம் மட்டும் நடந்தால் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Fans Expecting Vijay Should Invite Ajith For Thalapathy Thiruvizha Event Jana Nayagan Audio Launch
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X