வைரலாகும் நடிகர் சஞ்சய் தத் போட்டோ.. ரசிகர்கள் திடீர் கவலை.. விரைவில் நலம்பெற பிரார்த்தனை!

By

மும்பை: நடிகர் சஞ்சய் தத்தின் புதிய புகைப்படத்தைக் கண்டு ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக கூறியுள்ளனர்.

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு கொரோனாவுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அது இல்லை என்பது தெரியவந்தது.

திரும்பி விடுவேன்

திரும்பி விடுவேன்

இதுபற்றி, மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் இரண்டு நாட்களில் திரும்பி விடுவேன் என்றும் சஞ்சய் தத் கூறியிருந்தார். அவர் உடல் நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்திருந்தது. அதன்படி இரண்டு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார். வீட்டிற்கு வெளியே கூடியிருந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நடிப்புக்கு இடைவெளி

நடிப்புக்கு இடைவெளி

பின் ட்விட்டரில் திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், 'எனது மருத்துவ சிகிச்சைக்காக நடிப்புக்கு சிறிது காலம் இடைவெளி விட்டிருக்கிறேன். கவலைப்பட வேண்டாம், உங்கள் அன்பாலும் வாழ்த்துகளாலும் விரைவில் திரும்புவேன்' என்று கூறி இருந்தார். இது பரபரப்பானது.

நுரையீரல் புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய்

அவர் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு என்ன பிரச்னை என்று கேட்டு வந்தனர். இந்நிலையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இதுபற்றி அவரோ, அவர் குடும்பத்தினரோ எதையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

உடல்நிலை

உடல்நிலை

அதற்கான சிகிச்சை மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்குத் தொடங்கப்பட்டது. இதற்கிடையே, சஞ்சய் தத் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவரது மனைவி மான்யதா தத், மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ரசிகை எடுத்த போட்டோ

ரசிகை எடுத்த போட்டோ

இந்நிலையில் துபாயில் இருக்கும் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக நடிகர் சஞ்சய் தத் அங்கு சென்றிருந்தார். அதுபற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாயின. இப்போது மருத்துவத்துறையை சேர்ந்த ஒரு ரசிகை, நடிகர் சஞ்சய் தத்துடன் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பலவீனமாக

பலவீனமாக

அந்தப் புகைப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் மிகவும் பலவீனமாக இருக்கிறார். அவர் உடல் நிலை முன்பு போல ஆரோக்கியமாக இல்லை. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இதையடுத்து அவர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X