90ஸ் கிட்டின் ஃபேவரைட் விஜே.. ஆனந்த கண்ணன் திடீர் மரணம்.. டிவிட்டரில் கண்ணீர்விடும் ரசிகர்கள்!

சென்னை: 90ஸ் கிட்டின் ஃபேவரைட் விஜேவான ஆனந்த கண்ணன் மறைவுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சன் மியூசிக் சேனல் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன். வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளராக இருந்தார்.

எப்போதும் சிரித்த முகத்துடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஆனந்த் கண்ணன் 90ஸ் கிட்களின் பேவரைட் விஜேவாக இருந்தவர்.

ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்

ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்

நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். சன் மியூஸிக் மட்டுமின்றி எஸ்எஸ் மியூஸிக் என தமிழில் பிரபலமாக இருந்த தமிழ் சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

சிங்கப்பூர் தமிழரான ஆனந்த கண்ணன்

சிங்கப்பூர் தமிழரான ஆனந்த கண்ணன்

சித்துபாத் உள்ளிட்ட சீரீயலில் நடித்த ஆனந்த கண்ணன் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். சிங்கப்பூர் தமிழரான ஆனந்த கண்ணன் 2001 ஆம் ஆண்டும் முதல் 2011ஆம் ஆண்டு வரை சென்னையில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றி வந்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை

ரேடியோக்களில் ஆர்ஜேவாகவும் பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே ஆனந்த கண்ணனின் உயிர் பிரிந்தது.

பிரபலங்கள் ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபலங்கள் ரசிகர்கள் அதிர்ச்சி

அவரது மறைவு தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடவுள் தைரியத்தை கொடுக்க வேண்டும்

கடவுள் தைரியத்தை கொடுக்க வேண்டும்

ஆனந்த கண்ணனின் மறைவை அறிந்த இந்த ரசிகர், உண்மையிலேயே அதிர்ச்சியாக உள்ளது. ரிப் பிரதர்.. இந்த இழப்பை தாங்கிக்கொள்ள உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் நண்பர்களுக்கும் கடவுள் தைரியத்தை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

நம்பவே முடியவில்லை

நம்பவே முடியவில்லை

இந்த ரசிகர், ஆனந்த கண்ணன் மறைவை நம்பவே முடியவில்லை.. மீடியாவில் உள்ள சிறந்த திறமைசாலிகளில் ஒருவர் ஆனந்த கண்ணன்.. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

நல்ல பொழுது போக்காளர்..

நல்ல பொழுது போக்காளர்..

மற்றொரு ரசிகரான இவர், ஆனந்த் கண்ணனின் நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்துள்ளார். சிந்துபாத், போக்கிரி நேர் காணல், பல நேர் காணல்கள்.. அவர் நல்ல பொழுது போக்காளர்.. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.. என நொறுங்கிய இதயத்துடன் பதிவிட்டுள்ளார்.

எங்களுக்கு பிடித்த தொகுப்பாளர்

எங்களுக்கு பிடித்த தொகுப்பாளர்

இந்த ரசிகர் காலையில் சோகமான செய்தி.. எங்களுக்கு பிடித்த தொகுப்பாளர் மற்றும் நடிகர்களில் ஒருவரான #ஆனந்த கண்ணன் இறந்தார். அவரது ஆத்மா சாந்தி அடையவும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மேலும் சக்தி பெறவும் வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.

புற்று நோய் இருந்ததை நம்ப முடியவில்லை

புற்று நோய் இருந்ததை நம்ப முடியவில்லை

ஆனந்த கண்ணன் மறைவை அறிந்த இந்த ரசிகர் உங்களது ஆன்மா சாந்தியடைட்டும்.. நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.

மிகவும் சோகமான செய்தி

மிகவும் சோகமான செய்தி

மற்றொரு ரசிகரான இந்த நெட்டிசன், ஆனந்த கண்ணனை தமிழகத்தை அடிப்படையாக கொண்ட சேனல்களில் மட்டும் நான் பார்க்கவில்லை. வசந்தம் டிவியில் அவர் பணியாற்ற தொடங்கிய பிறகும் அவருடைய கேரியர் முழுவதையும் நான் பின்பற்றி வந்தேன்.. அவர் திறமையான தொகுப்பாளர் நல்ல தமிழ் சொற்பொழிவை கொண்டிருந்தார். மிகவும் சோகமான செய்தி என பதிவிட்டுள்ளார்.

90ஸ் கிட் எப்போதும் மறக்க மாட்டார்கள்

90ஸ் கிட் எப்போதும் மறக்க மாட்டார்கள்

மற்றொரு ரசிகரான இவர், உங்களின் மரணத்தை நம்பவே முடியவில்லை. உங்களின் கேரக்டரை 90ஸ் கிட் எப்போதும் மறக்க மாட்டார்கள்.. ஆன்மா சாந்தியடைட்டும் சகோதரர்.. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X