என்னா வாய்ஸ்.. என்னா ஆக்டிங்.. மிஸ் யூ முல்லை.. சித்துவின் கடைசி நிகழ்ச்சி.. உருகும் ரசிகர்கள்!

சென்னை: சித்ராவின் கடைசி நிகழ்ச்சியில் அவரது பர்ஃபாமன்ஸை பார்த்த ரசிகர்கள் மிஸ் யூ என கண்ணீர் வடித்த வருகின்றனர்.

சின்னத்திரை நடிகையான சித்ரா இறந்து 10 நாட்களை கடந்துவிட்டது. ஆனால் சித்ராவின் மரணத்தில் உள்ள மர்மம் மட்டும் இன்னும் நீங்கவில்லை.

இந்நிலையில் நடிகை சித்ரா தான் இறக்கும் முன்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியில்தான் பங்கேற்றார்.

சித்ரா தற்கொலை

சித்ரா தற்கொலை

சென்னை நசரத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் கடந்த 8 ஆம் தேதி இரவு ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. இதில் சித்ரா நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் பங்கேற்றனர். இதனை முடித்துவிட்டு 9ஆம் தேதி அதிகாலை அங்குள்ள ஹோட்டல் அறைக்கு கணவருடன் வந்த சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடைசி நிகழ்ச்சி புரமோ

கடைசி நிகழ்ச்சி புரமோ

இதற்கான எபிசோட் இன்று ஒளிபரப்பானது. ஆனால் கடந்த ஒரு வாரமாகவே சித்ராவின் கடைசி நிகழ்ச்சி என அதற்கான புரமோ ஒளிபரப்பாகி வந்தது. மேலும் அவ்வப்போது சித்ரா பங்கேற்ற பகுதிகள் மட்டும் விஜய் டிவியின் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு வந்தது.

ஈமோஜி முக பாவனைகள்

ஈமோஜி முக பாவனைகள்

அந்த வகையில் நேற்று சித்ரா மற்றும் கதிர் பங்கேற்ற ஈமோஜிஸ் செக்மெண்ட் ஒளிபரப்பப்பட்டது. அதில் அப்படியே அச்சு அசலாக ஈமோஜிகளை போன்றே முக பாவனைகளை கொண்டு வந்தார் சித்ரா.

எப்படி தோனுச்சு?

எப்படி தோனுச்சு?

மேலும் சரக்கடித்த பூனை, லவ் ஃபீல் பூனை, கோபக்கார பூனை, அவசர நேரத்தில் தவிக்கும் பூனை என கலக்கினார். அவரது பர்ஃபாமன்ஸை பார்த்த நெட்டிசன்கள், எப்படிடா இந்த பெண்ணை டார்ச்சர் பண்ண தோனுச்சு என வேதனையுடன் பதிவிட்டனர்.

ஸ்பிரே அடிச்சுப்புடுவேன்

இந்நிலையில் இன்று நிகழ்ச்சி ஒளிபரப்பான நிலையில் சித்ரா பங்கேற்ற ஸ்பிரே அடிச்சுப்புடுவேன் ரவுண்டில் அவர் கொடுத்த பர்ஃபாமன்ஸை விஜய் டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது.

ஏன் எனக்கு பழைய பாட்டு?

ஏன் எனக்கு பழைய பாட்டு?

இதில் நான் ரெடி நீங்க ரெடியா பாடல் கொடுக்கப்பட ஏன் எனக்கு ரொம்ப பழைய பாட்டை போட்டிங்க என்று கேட்டப்படியே அந்த பாடலை பாடுகிறார். அப்போது மிஸ்ஸான வார்த்தையை சொல்லாமல் சொதப்பி விடுகிறார்.

ஸ்பிரே அடித்த பிரியங்கா

ஸ்பிரே அடித்த பிரியங்கா

இதனால் முகத்தில் ஸ்பிரே அடித்து விடுவார்கள் என்று தெரிந்து அந்த இடத்தை விட்டு நகருகிறார் சித்ரா. ஆனால் அவர் சொன்னது சரியான விடை என்று கூறி அவர் மீது ஸ்பிரே அடிக்கிறார் பிரியங்கா.

க்யூட் டான்ஸ்

க்யூட் டான்ஸ்

அப்போது முன்னால் வந்து தனது முதுகை காட்டி மேகம் கருக்குது பாடலின் இசை பின்னணியில் ஒலிக்க க்யூட்டாக டான்ஸ் ஆடுகிறார் சித்ரா. அவரது இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

மிஸ் யூ முல்லை

மிஸ் யூ முல்லை

இதனை பார்த்த ரசிகர்கள், அவருடைய குரலும் நடிப்பும் அருமை.. மிஸ் யூ முல்லை என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர் இதை அழாமல் பார்க்க முடியாது என்றும் அழும் ஈமோஜிகளை ஷேர் செய்து பதிவிட்டுள்ளனர்.

தெரிஞ்சுதான் இந்த சந்தோஷமா?

தெரிஞ்சுதான் இந்த சந்தோஷமா?

பலரும் மிஸ் யூ சித்து என்றும் உடைந்த இதயத்தையும் ஷேர் செய்து தங்களின் வேதனையை பகிர்ந்துள்ளனர். சித்ராவின் இந்த வீடியோவை பார்த்த இந்த நெட்டிசன், இன்னும் கொஞ்ச நேரத்துல அமைதியா இருக்க போறோம்னு தெரிஞ்சுதான் இவ்ளோ சந்தோஷமா ஆட்டம் பாட்டு சிரிப்புன்னு குதூகலமா இருந்தியாம்மா என்றும் கேட்டுள்ளனர்.

Recommended Video

Pandian Stores முல்லையாக இனி இவர்தான் | Mullai Replacement - Filmibeat Tamil
சொல்ல முடியாத இழப்பு

சொல்ல முடியாத இழப்பு

மனசே பொறுக்கலையே உன்னை நினைக்கும் போது. டிவில பார்க்குற எங்களுக்கே இப்படின்னா பெத்தவங்க பழகுனவங்களுக்கு எல்லாம் எப்படி இருக்கும்.. சமாதானமே சொல்ல முடியாத இழப்பு என்றும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X