Dhaush: தனுஷ் வீட்டின் முன்பு அவரை சுற்றிவளைத்த ஃபேன்ஸ்.. கொண்டாட அடுத்தடுத்த காரணங்கள்!
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது ராயன். இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து இரு தினங்களிலேயே 20 கோடி வசூலை தாண்டி வசூலித்துள்ளது. இன்றைய தினமும் வார இறுதி நாளாக அமைந்துள்ளதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம் தனுஷ் பிறந்த நாளையொட்டி இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ, குபேரா புதிய போஸ்டர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. குபேரா படத்தின் சூட்டிங் இந்த மாதத்திற்குள் நிறைவடையுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் படத்தின் சூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் இன்றைய தினம் தன்னுடைய 41வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனுஷின் ராயன் படம் அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ளது. இந்த படம் சர்வதேச அளவில் இரு தினங்களில் 20 கோடி வசூலை தாண்டியுள்ள நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்டகால இடைவெளியில் தற்போது ராயன் படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். இந்த படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் வெளியாகி உள்ள நிலையில் தன்னுடைய அழுத்தமான கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகளால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார் தனுஷ்.
ராயன் படம்: படத்தில் தனுசுடன் சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ், செல்வராகவன், அபர்ணா முரளி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில் படத்தில் சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர் தனுஷிற்கு அடுத்ததாக நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் 20 கோடி ரூபாய் வசூலை இரு தினங்களில் எட்டியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் 100 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் தனுஷின் பிறந்த நாளையொட்டி சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
தனுஷ் பிறந்தநாள்: ராயன் படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து குபேரா படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் தனுஷ் வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் இன்றைய தினம் அவரது பிறந்த நாள் மற்றும் ராயன் சக்சசிற்கு வாழ்த்துக்களை கூறும் வகையில் குவிந்ததால் அந்த இடமே பரபரப்பிற்கு உள்ளாகியது. தனுஷ் இந்த நேரத்தில் ரசிகர்களிடையே மிகவும் இயல்பாக பேசி பழகி அவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்ததையும் பார்க்க முடிந்தது. 40 வயதை தாண்டிய நிலையில் தனுஷ் தற்போது கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல படங்களில் நடித்துள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் அடுத்தப்படம்: தனுஷின் 50வது படமாக வெளியாகி உள்ளது ராயன். அவரது இயக்கத்தில் இரண்டாவது படமாக இந்த படம் உருவாகி மிக சிறப்பான வெற்றியை அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் உருவாகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ள நிலையில் படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை தன்னுடைய சொந்த தயாரிப்பில் தனுஷ் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











