தலைவா உன் போஸ்டருக்கே முத்தம் கொடுப்போம்.. ரஜினிகாந்த் வீட்டு முன் ரசிகர்கள் செய்த அலப்பறை!
சென்னை: சூப்பர் ஸ்டார், தலைவர் என அடுத்தடுத்து பட்டங்களால் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். இன்றைய தினம் அவர் தனது 74வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் சமூக வலைதளங்களிலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அடுத்தடுத்து வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது அவர் சென்னையில் இல்லாத நிலையில் அவரது வீட்டின் முன்பு அவரது ஏராளமான ரசிகர்கள் கூடி அவரது போஸ்டருக்கு முத்தம் கொடுத்தும் அவரது ஸ்டைலை போல நடித்தும் அலப்பறையை கூட்டியுள்ளனர். பல ஆண்டுகளை கடந்து ரஜினிகாந்த் படங்களில் மாஸ் காட்டி வரும் நிலையில் அவரது ரசிகர்களின் அன்பு குறையாததையே இது காட்டுகிறது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் இன்றைய தினம் தன்னுடைய 74வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த வயதிலும் அவரது சுறுசுறுப்பு மற்றும் எனர்ஜி மற்றவர்களுக்கு பாஸ் ஆகி வருகிறது. கடந்த ஆண்டில் ஜெயிலர் படம் ரஜினி நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் இந்த ஆண்டு லால் சலாம் மற்றும் வேட்டையன் படங்கள் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வேட்டையன் படம் ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தின் வசூலும் சிறப்பாக அமைந்துள்ள நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் பிறந்தநாள்: படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது வட இந்தியாவில் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக இதற்காக அவர் விமானம் மூலம் புறப்பட்டு சென்ற நிலையில், விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்ததும் அதிகமான கவனத்தை பெற்றது. இந்நிலையில் இன்றைய தினம் அவரது பிறந்த நாளை ஒட்டி அவரது வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அவரது வீட்டின் முன்பு இருந்த அவரது போஸ்டர்களுக்கு முத்தம் கொடுத்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினர்.
ரஜினி வீட்டின் முன்பு ரசிகர்கள் அலப்பறை: மேலும் ரஜினிகாந்த் போலவே ஸ்டைல் காட்டி அடுத்தடுத்து ரசிகர்கள் செய்த அலப்பறை தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக ட்ரெண்டாகி வருகிறது. ரஜினிகாந்தின் போஸ்டருடன் அடுத்த ஆண்டிற்கான காலண்டரையும் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். அவருடைய பிறந்தநாளில் அவரை பார்ப்பதற்காக மழையையையும் பொருட்படுத்தாமல் தாங்கள் வந்ததாகவும் ஆனால் அவரை பார்க்க முடியாதது ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் ரசிகர்கள்தெரிவித்துள்ளனர்.அவர் தங்களுக்கு தெய்வம் போனற்வர் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் சாகும்வரை அவரின் ரசிகராகவே செயல்படுவோம் என்றும் கூறியுள்ளனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்: 50 ஆண்டுகளை கடந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் இந்திய அளவில் நடித்து தன்னை சூப்பர் ஸ்டாராக நிலை நிறுத்தியுள்ளார். படையப்பா படத்தில் வரும் வசனம் போல வயதானாலும் அவரது ஸ்டைலும் அழகும் சிறிதும் குறையவில்லை. தன்னுடைய உடல் நிலையை சிறப்பாக மெயின்டெயின் செய்து வருகிறார் ரஜினிகாந்த். இருந்த போதிலும் அவ்வப்போது தன்னுடைய உடல் நிலையில் ஏற்படும் குறைபாடுகளுக்காக வெளிநாடுகளில் சிகிச்சையும் பெற்று வருகிறார்.
அப்டேட்களுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்: தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பும் கூலி படத்தின் அடுத்த அப்டேட்டும் இன்றைய தினம் அவரது பிறந்தநாளையொட்டி வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளுக்காக அவரது ரசிகர்கள் மரண மாஸாக வெயிட் செய்து வருகின்றனர். இந்த வயதிலும் சூப்பர் ஸ்டாராக தலைவராக தன்னுடைய ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார் ரஜினிகாந்த். இதற்காக அவரது மெனக்கடல்கள் மிகவும் அதிகம். தன்னுடைய அடுத்தடுத்த முயற்சிகளால் அவர் இந்த நிலையில் தற்போது உள்ளார்.


Click it and Unblock the Notifications











