ரஜினிக்கே ஷாக் கொடுத்த ‘ரஜினி’....
சென்னை: கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் லிங்கா. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா என இரண்டு நாயகிகள். காமெடிக்கு சந்தானம்.
ஏற்கனவே ரஜினியுடன் எந்திரன் படத்தில் நடித்துள்ளார் சந்தானம். இந்நிலையில், ரஜினியுடன் லிங்காவில் நடித்த அனுபவம் குறித்து அவர் ஆனந்தவிகடனுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர், ரஜினி ரசிகர் ஒருவர் தனக்கும் ரஜினிக்கும் அளித்த அதிர்ச்சி குறித்து பின்வருமாறு விவரித்துள்ளார்.

செம ஸ்கிரிப்ட்...
லிங்கா ஷூட்டிங் ஸ்பாட் காமெடிகளை வெச்சே செம ஸ்கிர்ப்ட் பண்ணலாம்.

ரஜினி ரசிகர்கள்...
கர்நாடக மாநிலம் சிமோகாவில் ஷூட்டிங். பெங்களூருல இருந்து தினமும் ஆயிரம் ரசிகர்களாவது கிளம்பி வந்து, நாங்க தங்கி இருந்த ஹோட்டலுக்கு எதிர்ப்புறம் உட்கார்ந்துப்பாங்க. எவ்வளவு நேரம் ஆனாலும் ரஜினி சாரை தூரத்துல இருந்தாவது பார்த்துட்டுத்தான் போவாங்க.

ரஜினி மாதிரியே...
ஒரு நாள் காலையில் பார்த்தா, திடீர்னு என் ரூம் முன்னாடி ரஜினி சார் நின்னுட்டு இருக்கார். ‘என்னண்ணே அதுக்குள்ள பக்காவா ரெடி ஆகிட்டீங்க?'னு விசாரிச்சுட்டே பக்கத்துல போனா, அது ரஜினி இல்லை.

டூப்ளிகேட் ரஜினி...
அவரை மாதிரியே மேக்கப் பண்ணிட்டு வந்த ரஜினி ரசிகன். பேச்சு, ஸ்டைல் எல்லாம் அப்படியே அச்சு அசல் ரஜினி.

ஒரே அல்லோலகல்லோலம்....
நான் ஷாக்காக, ரஜினி சார் என்னை விட அதிர்ச்சியாக, அதைப் பார்த்து டூப்ளிகேட் ரஜினி சிரிக்க... ஒரே அல்லோலகல்லோலம் தான் !' என அதில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











