ப்யூர் என்டர்டெய்ன்மென்ட்.. நம்பி டிக்கெட் புக் பண்ணலாம்.. எந்த படத்துக்கு இப்படி ரிவிவ்யூ?

Recommended Video

A1 படம் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது மக்கள் கருத்து.

சென்னை: நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள அக்யூஸ்ட் நம்பர் ஒன் படத்தை நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

தில்லுக்கு துட்டு 2 படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் ஜான்சன் இயக்கத்தில் அக்யூஸ்ட் நம்பர் ஒன் என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா. இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

அதில் பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் சந்தானம் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக படத்திற்கு தடை விதிக்கக் கோவையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையான அக்யூஸ்ட் நம்பர் ஒன் படம் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதனால் #A1movie என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ப்யூர் என்டர்டெய்ன்மென்ட்

சமீபத்துல எந்த படத்துக்கும் இப்படி வயிறு வலிக்க வலிக்க சிரிக்கல.. ப்யூர் என்டர்டெய்ன்மென்ட்.. நம்பி டிக்கெட் புக் பண்ணலாம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

மயக்கமே வந்திடும் போல

ஏ1 படம் இன்டர்வெல்- லொல்லு சபா சந்தானம் இஸ் பேக். சிரிச்சு மயக்கமே வந்திடும் போல. பின்னி பெடல எடுத்திருக்காங்க. அதுல இருக்கும் பாட்டுக்கு எதிர் பாட்டு மேட்டர் நிச்சயம் ட்ரென்ட்டாகும் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

பெரிய ஹிட் படம்

வாழை பழத்த வச்சு கொல்ற சீன்.. படம் முடிஞ்ச பிறகும் நெனச்சு நெனச்சு சிரிச்சிட்டு இருக்கேன்..சந்தானத்தோட கேரியர்ல பெரிய ஹிட் இந்த படமாதான் இருக்கும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

வயிறு வலிக்க சிரிக்கல

சந்தானம் பேக் டு பார்ம். சமீபத்துல வந்த எந்த படத்துக்கும் இப்படி வயிறு வலிக்க வலிக்க சிரிக்கல.. ப்யூர் என்டர்டெய்மென்ட் என்று கூறுகிறார் ரசிகர்.

வேற லெவல் காமெடி மாம்ஸ்

சமீபத்துல எந்த படத்துக்கும் இப்படி வயிறு வலிக்க வலிக்க சிரிக்கல..
ப்யூர் என்டர்டெய்ன்மென்ட் நம்பி டிக்கெட் புக் பண்ணலாம். சந்தானம் வேற லெவல் காமெடி மாம்ஸ் என்று கூறுகிறார் இவர்.

சந்தானம் கலக்கல்

ஏ1 அழும்பு அல்டிமேட். சந்தானம் கலக்கல். இன்டெர்வல். என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

பக்கா என்டர்டெய்னர்

ஏ1 படம் இப்படி சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு.. பக்கா என்டர்டெய்னர்.. பொண்ணு கேக்க போற சீன்லாம் ஏ1 என்கிறார் இந்த ரசிகர்.

சாண்டா ஸ்டைல்

சந்தானத்தின் காமெடியை விரும்பும் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் இது. நம்முடைய சாண்டா ஸ்டைல் என்டெர்டெய்ன் என திரும்பி வந்துள்ளார் என்கின்றார் இவர்.

என்ஜாய் பண்ணுவீங்க

ரீசண்டா வந்த படங்களிலேயே காமெடில பெஸ்ட்டு ஏ1 படம் தான். சந்தானம் ஜெயிச்சிட்டாரு. குடும்பத்தோட போய் தியேட்டர்ல பாருங்க.
கண்டிப்பா என்ஜாய் பண்ணுவீங்க. என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X